Petition updateSave Penang! Reject the 3-Islands Reclamation!பினாங்கை காப்பாற்றுங்கள்! 3 தீவுகளின் மீட்புப்பணியை நிராகரியுங்கள்!
Salma KhooGeorge Town, 07, Malaysia
May 27, 2019

BM / English中文 / தமிழ் / 日本語 / BI / ภาษาไทย

Save Penang! Reject the 3-Islands Reclamation!

பினாங்கு மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள 3 தீவு மீட்புத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். பினங்கு மாநில முதலமைச்சர் மாண்புமிகு சௌ கொன் இயாவ் கடந்த 6.5.2019 அன்று இத்திட்டம் பற்றி அறிவித்தார். ஏறக்குறைய 4,500 ஏக்கர் அல்லது 7 சதுர மைல் பரப்பளவைக் கொண்டிருக்கும்  இத்திட்டம் குறித்து போதுமான விவரங்கள் இல்லை, மேலும் அது சம்பந்தமான பொது ஆலோசனைகளும் நடத்தப்பட்டிருக்கவில்லை. தேசிய திட்டமிடல் மன்றத்தின் தலைவரான துன் மகாதீர் தென் பினாங்கு தீவு மீட்பு திட்டத்தைப் பின்வரும் காரணங்களுக்காக நிராகரிக்க வேண்டும்:

  1. பினாங்கு மாநிலத்தின் மிக வளமான மீன் பிடிப்பு பகுதி அழிந்துவிடும். உலக அளவில் மீன் வளங்கள் குறைந்து கொண்டிருக்கும்  வேளையில், நமக்கிருக்கும் கடலோர மீன்பிடி வளங்கள் நமது உணவு பாதுகாப்பபின் முக்கிய அம்சாமாகும்.  இது உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு சுற்றுலாத் துறைக்கும் அவசியமாகிறது. இது அழிக்கப்பட்டால், பினாங்குவாசிகள் கடல் பிராணி உணவுகளின் விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாத அளவுக்கு அல்லல் படுவர்
     
  2. 4,817 கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் ஆட்டம் கண்டு விடும். இந்த மீனவர்கள் இது குறித்து பல முறை ஆர்பாட்டங்களை நடத்தி விட்டனர். தெலுக் கும்பார் பந்தாய் சுங்கை பத்து சார்பாக 14 சங்கங்களைச் சேர்ந்த 1,500  மீனவர்கள் திரளாக கூடி மிகப் பெரிய ஆர்பாட்டத்தை நடத்தினார்கள்.  பினாங்கு மாநில அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தும் கூட ஏற்கெனவே வடப்பகுதி தீவு மீட்பு பணியின் போது மீனவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை  என்பதை மீனவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்
  3. அதன் பாதிப்பு பேராக் மாநிலத்திலும் தெரிய ஆரம்பித்து விடும். கடலின் அடிப்பகுதி தூர்வாரி அழிக்கப்பட்டு விடும்.  வடப்பகுதி கடல் மீட்பு பணியின் போது பினாங்கு மாநில மீனவர்களும், 6,080 பேராக்கைச் சேர்ந்த  மீனவர்கள் உட்பட கற்களையும், சகதியும் மீன்வலையில் வாரி எடுத்தனர். இதனால் அவர்களது மீன் வலைகளும் சேதமுற்று போனது. 
  4. பினாங்கு மாநிலத்தின் தென் கடற்கரை தூய்மையை இழந்து விடும். பெர்மாத்தாங் டாமார் லவுட், கெர்த்தாக் சங்குல் மற்றும் தெலுக் கும்பார் கடல் மீட்பு பணி மற்றும் மாசுபாட்டின் காரணத்தால் பாழ்பட்டு விடும். உள்ளூர்வாசிகள் தங்கள் ஓய்வுநேரத்தைச் செலவிட விரும்பும் தங்களுக்கு விருப்பமான கடற்கரை இழந்து விடுவார்கள்.  இந்த பொறுப்பற்ற திட்டத்தால் பினாங்கு மாநில சூழியல் சுற்றுலா தனது மதிப்பை இழந்து விடும்.
  5. கடல்வாழ் உயிரினங்களை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். அழிவின் விளிம்பில் இருக்கும் ஆலிவ் ரிட்லி ரக  கடல் ஆமைகளின் இருப்பிடம் சீரழிக்கப்பட்டு விடும். பல மைல் தூரத்திற்கு கடல் பல்லுயிர்களின் வசிப்பிட சூழல்  தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு, அழிக்கப்பட்டும் வரும்.
  6. சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இத்திட்டம் சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கடல் மீட்பு திட்டம் ஆண்டுக்கு 3.2 மில்லியன் டன் கரிமவளியை வெளியேற்றும் . (ஆதாரம், 18 நாசியாட், 18 ஏப்ரல் 2019).
  7. மவெ46 பில்லியன் செலவிலான மாநில பொதுபோக்குவரத்து திட்டம் காரணமாக காட்டப்படுவது ஏற்புடையதல்ல. போக்குவரத்து நெரிசலைச் சரிபண்ணுவதற்கும், தேவைபடும் பொது போக்குவரத்து திட்டத்தினால் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்கும் கடல் மீட்பும், விற்பனையும் தேவையாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் போக்குவரத்து திட்டத்தின் அடிப்படையில் குறைகள் நிறைந்திருப்பதால் இப்படிப்பட்ட விலையுயர்வான திட்டம் சாதகமான ஒருங்கிணந்த தீர்வை கொடுக்காது.
  8. கடல் நில மீட்பு பணிக்குக் சொல்லப்படும் கூடுதல் காரணங்களும் சந்தேகத்திற்கிடமாகவே இருக்கிறது. பினாங்கு விமான நிலையம் விசாலமாக்கும் பணியும் கூட இப்பொழுது கூலிம் அனைத்துலக விமான நிலைய திட்டத்தினால் மாற்றம் கண்டிருக்கிறது.  பெரும்பாலான பினாங்குவாசிகளுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் எதிர்கால நகர் விரிவாக்கும் நம்பக தன்மையற்ற மக்கள் தொகை 2.45 மில்லியனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப் பட்டிருக்கிறது. புள்ளிவிவர இலாகா கொடுக்கும் மக்கள்தொகை கணக்கோ 1.98 மில்லியன் மட்டுமே.  
  9. மேம்பாட்டு திட்டங்களுக்கும் நில பற்றாக்குறைக்கும் மோசமான திட்டமிடலே காரணமே தவிர நிலம் போதவில்லை என்பது காரணமன்று.  பினாங்கு மேம்பாடு கழகம் செபராங் பிராயில் 4,500 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறது. 2030 ஆண்டுக்குள் செபராங் பிறை மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது முதலமைச்சரின் தூரநோக்கு பார்வையாகும். முறையான உள்கட்டமைப்பு திட்டங்களும், இரண்டாவது பாலத்துடன் அதனை இணைக்கும் சிறப்பான போக்குவரத்து முறையின் வழி மட்டுமே இது சாத்தியப்படுமே தவிர கடல் மீட்பு பணிகளினால் அல்ல.
  10. பினாங்கு மாநில அரசாங்கமும் இத்திட்டம் குறித்து வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. ஆரம்பத்திலிருந்தே இத்திட்டம் பற்றிய தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட முறை மிகவும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தது, பார்வையாளர்கள் நகல் எடுக்கவோ, படம் பிடிக்கவோ அனுமதிக்கப்படவில்லை.  இன்றைய நாள் வரை இத்திட்டம் பற்றிய செலவு விவரங்கள் பகிரப்படவில்லை.
  11. இந்த மேம்பாட்டு திட்டம்  பேராசைக்காக வரையபட்டதே தவிர தேவைக்காக அல்ல. ஏற்கெனவே எங்கு பார்த்தாலும் அதிகமான ஆடம்பரசொகுசு அடுக்குமாடி வீடுகள்  காலியாக இருக்கின்றன. இப்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் வடப்பகுதி நில மீட்பு  (900 ஏக்கர்)  மற்றும்  3 தீவுகள் கடல் மீட்பு நிச்சயம் மேலும் அதிகமான சொத்து தேக்கத்தை உண்டுப்பண்ணும்!
  12. தீவு மீட்பு திட்டம் மாநிலத்தின் பராமரிப்பு செலவினத்தை அதிகரிக்கும்.  நாங்கள் கடல்மீட்பு பணிக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் இத்தகைய கடல்மீட்பு ஆடம்பர சொகுசு மேம்பாட்டு பணிகளை எதிர்க்கின்றோம்.   வண்டல் மண் சுத்தப்படுத்தும் பணிக்காகவும் அதிகமான பொதுக்களின் பணம் செலவாகும்.
  13. மலேசியாவில் இன்னும் ஒரு “வன நகரம்” வேண்டாம். இம்மூன்று தீவுகளிலும் 446,400 மக்கள் வசிக்கலாம், ஆனால் உண்மையில் அங்கு வசிக்கப்போவது யார்? 6-20 விழுக்காடு வீடுகள் மட்டுமே மலிவான வீடுகள். அதிக எண்ணிக்கையிலான வீடுகள் பெரிய தொகை செலவழிக்கும் வெளிநாட்டவர்கள் வாங்குவதற்காக கட்டப்படுகிறது. இத்தகைய மேம்பாட்டு திட்டம் சமூக ஏற்ற தாழ்வுகளை சரிசெய்ய இயலுமா?  
  14. மாநிலம் இங்கிருக்கும் வீடு வாங்குனர்களைக் காக்க வேண்டுமே தவிர எதிர்கால வாங்குனர்களை அல்ல. பினாங்குவாசிகள்  தொடர்ந்தார் போல் தீவிலும், அக்கரையிலும் ஏற்படும் வெள்ளப் பிரச்னைகள், மலைகள் சரிக்கப்படுவது,  நிலச்சரிவுகள் பற்றி சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.  இங்கு வசிப்பவர்களுக்குத் தேவையான வகையில் சுற்றுச்சூழலைச் சரிப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்கு பதில், பினாங்கு மாநிலம் ஏன் “திறமை– பசுமை” மிக்க 3 தீவுகளில் வீடு வாங்கப் போகிறர்வர்கள் மீது இவ்வளவு கரிசணம் காட்ட வேண்டும்.  
  15. திட்டமிடல் மற்றும் நிர்வாக முறைகளில் வெளிப்படையற்ற தன்மை மறைமுகமாக ஏதோ ஒரு விஷயத்தை உள்ளடக்கியிருக்கிறது என்பதை காட்டுகிறது. மாநிலத்தில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, மீட்பு பணியில் ஏற்பட்டிருக்கும் செலவினங்களை ஈடுகட்ட, தென் தீவில் நிலவி வரும் “சொத்து விளையாட்டு போன்றவைதான் இத்தீவு மீட்பு பணியின் உண்மையான நோக்கமோ? ஒரு மாபெரும் திட்டம் முதலைமைச்சரை முன்நிறுத்தி நடத்தப்படும் போது, சில கட்டளைகள் உதாரணம் நில மதிப்புக்கள், அனைத்துலக பணப் புழக்கம், அறிவிக்கப்படாத அரசியல் நிதிமுறைக்கும் இட்டுச் செல்லக்கூடும். 
  16. ஆபத்தான திட்டங்கள் மாநிலத்தின் நிதி நிலமையை ஆட்டம் காண வைக்கலாம்.  வருடத்திற்கு ஒரு பில்லியன் வருமானத்தை வைத்துக் கொண்டு, 16 பில்லியன் மீட்பு பணிக்கு மாநிலம், மவெ1 பில்லியன் கடன் கோருகிறது.
  17. மிக குறைவான நன்மைக்கு மிக பெரிய விஷயம் பணயமாக வைக்கப்படுகிறது. இத்திட்டம் வெற்றி பெறவில்லை என்றால், பினாங்கு மாநிலம் மிகப் பெரிய கடன் சுமையைச் சுமக்க வேண்டும். இதனால் அடுத்து வரும் தலைமுறை மிகப் பெரிய வாய்ப்புகளையும், சீரான மேம்பாட்டையும் இழப்பார்கள்.  
  18. சிறப்பான, மலிவான, விரைவான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படி மாநிலம் பொதுபோக்குவரத்தை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்து, மக்களை பொதுபோக்குவரத்து பக்கம் ஈர்த்தால், தற்போது இருக்கும் நம்முடைய சாலைகள் 2030 வரை போதுமானதாகவே இருக்கும். 
  19. தீர்வு என்பது பெரும்பான்மைய பினாங்குவாசிகளுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். ம.வெ9.6 பில்லியன் பென்-ஐலண்ட் லிங்  மற்றும் மவெ9 பில்லியன் எல்ஆர்டி   என்ற இரண்டும் பெரும் திட்டமாகவும். இது குறிப்பாக 3 தீவுகளுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருக்கும்.  இதற்காக இப்பொழுது வசிக்கும் பினாங்குவாசிகள் சுற்றுச்சூழலில் விழையும் இன்னல்களை அனுபவிக்க வேண்டுமா எனும் வினா எழுகிறது
  20. தீர்வு சமூகத்திற்கு நியாயமானதாக இருக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதுதான் நோக்கம் என்றால், வாகனமோட்டிகளின் நன்மைக்காக மட்டுமே ஏன் இதனைச் செய்ய வேண்டும்.  எதற்காக மீனவர்களும், கிராமப்பகுதியில் வசிப்பவர்களும் தங்களுடைய வாழ்க்கையையயும், வாழ்வாதாரத்தையும் அதற்காக பறிகொடுக்க வேண்டும்.

 பினாங்கு மாநிலம் மிக அழகான மலைகளாலும், கடல்களாலும் சூழப்பட்டிருப்பது ஒரு வரமாகும். யுனேஸ்கோ பட்டியலில் ஜார்ஜ்டவுன் இருக்கிறது. ஆனால் இப்பொழுது இவையனைத்தையும் இழக்கும் நிலையில் இருக்கிறோம்.  பினாங்கு தீவு எப்படி இருக்க வேண்டும் என நாம் நினைக்கின்றோம்? நம்முடைய மலைகைளயும், கடல்களையும் காவு கொள்ளும் கார்கள் ஆக்கிரமிக்கும், கற்களால் ஆன ஒரு நகரம்தான் நமக்கு வேண்டுமா?  அல்லது திறமையான, பசுமையான, எல்லா பினாங்குவாசிகளும் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழும் சூழல் வேண்டுமா?

நிலையான வளர்ச்சி  என்பது பொருளாதார, சமூக ரீதியில் விவேகமானதாக இருக்கும் போது அது வலுவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும். தற்போதைய மற்றும் எதிர்கால .தலைமுறைக்கு சரியான சூழலை விட்டச்செல்லும் பொறுப்பு நமக்கிருக்கிறது!
 
மீனவர்களைக் காப்பாறுங்கள்! கடலோரங்களைக் காப்பாற்றுங்கள்! மீட்புபணியை நிராகரியுஙகள்!
 

#SavePenang #PenangTolakTambak

https://www.change.org/p/prime-minister-of-malaysia-save-penang-reject-the-3-islands-reclamation

 

Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X