தமிழக கன்னட மக்களுக்கு கன்னட எழுத்தறிவு

Recent signers:
Udaiyali M and 9 others have signed recently.

The Issue

அனுப்புநர்

    சி. விவேக் பாலாஜி, B.E., B.A.LL.B.,

    நாகையகவுண்டன்பட்டி

பெறுநர்

  1. மாண்புமிகு இந்திய ஜனாதிபதி அவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகை, புது தில்லி.
  2. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தலைமைச் செயலகம், சென்னை.

மாண்புமிகு அம்மா/ஐயா,

  1. இந்தியா, மொழிவாரி மாநிலங்களாக பிரித்த போது, தங்கள் மொழியினரிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டவர்களான கன்னடர்கள், புதிய மாநிலத்தின் பெரும்பான்மை மொழியான தமிழை தங்களின் தாய்மொழியாக ஏற்க வேண்டியதாயிற்று. பெருகிவரும் தேசியவாதம்  மற்றும் தமிழினவாதம் போன்ற சித்தாந்தங்கள் இந்த சிறுபான்மை மொழியினரின் மொழி மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் அடிப்படை உரிமைகளை (இந்திய அரசியலமைப்பு ஷ.29, 30 )  புறந்தள்ளி பெரும்பான்மை மொழியின் நலனே முன்னிலைபடுத்தப்படுகிறது.
    1. இந்திய அரசியலமைப்பு ஷரத்து 29(1)இன் படி, எங்கள் மொழியை பாதுகாக்கும் உரிமையும், ஷரத்து 30(1)இன் படி, கல்வி நிறுவனங்கள் அமைத்து நிர்வகிக்கும் உரிமையும் அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளது.
    2. மேலும், ஷரத்து 350அ-வின் படி, தாய்மொழி வழியில் ஆரம்ப கல்வி பயிற்றிவிக்கும் கடமையும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்களுக்கும் இது தொடர்பான ஆணை பிறப்பிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  2. தமிழ்நாட்டில், கன்னட மொழியின் எழுத்தறிவு முற்றிலுமாக அழிந்துவிட்டது. அது வெறும் பேச்சு வடிவில் தமிழ் கலந்து சுருங்கி வருகிறது. ஒருவரின் மொழி அழிந்துவிட்டால் அவரின் வரலாற்று அடையாளங்கள் தொலைந்துவிடும். பிறந்த மண்ணிலேயே அகதிகளாகத் திரியும் அவலம் நேரிடும்.
  3. எனவே, தமிழ்நாட்டில்  இவ்வாறு சிதரிக்கிடக்கும் சிறுபான்மையினரான கன்னடம் பேசும் தமிழர்களின் உரிமைகளான தாய்மொழியில் பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் பண்பாட்டுரிமை ஆகியவற்றை எங்கள் மக்கள் வாழும் பகுதியிலேயே பெற்றிட கீழ்கண்ட கொரிக்கைகள் பணிந்தனுப்பப்படுகிறது.
    1. எங்கள் தாய்மொழியின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எங்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளில் எங்கள் தாய்மொழியான கன்னடத்தையும், கன்னட வழியில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் பிற பாடங்களையும் பயிற்றுவித்தல்.
    2. அழிந்து வரும் எங்கள் பேச்சு மொழியை ஆராய்ச்சி செய்து அதன் தொடர்ச்சியை நிறுவுதல்.
    3. தமிழுக்கும் தமிழகத்திற்கும் தன் வாழ்வை அர்ப்பணித்த கன்னடர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி சிறப்பித்தல்
  4. மேற்கண்ட எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,

சி. விவேக் பாலாஜி, B.E., B.A.LL.B., மற்றும் பலர்.

avatar of the starter
Viveak Balaji SivajiPetition StarterI am a software engineer and a law student. I advocate for protection of various fundamental rights of citizens of India, such as Right to privacy, Linguistic and Cultural rights of Minorities and Voting rights, as provided by the Constitution of India.

11

The Decision Makers

Chief Minister of TamilNadu
Chief Minister of TamilNadu
Secretariat, Chennai, TamilNadu
President of India
President of India
Rashtrapathi Bhavan, New Delhi
Petition updates