காவடி பாதை மாற்றம் மற்றும் சடையப்பனார் புதுத்தெரு வருகை நேரம் குறித்து வேண்டுகோள்.

4

Let’s get to 5 signatures!
Petitions with 1,000+ supporters are 5x more likely to win!

The Issue

நமது சமுதாய மக்களால் ஆண்டுதோறும் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வரும் காவடிக் கட்டு திருவிழா, வரலாற்றுப் பெருமையும் ஆன்மீகச் சிறப்பும் மிக்கது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

 தற்போது நமது காவடி, நம் சமுதாயத்திற்குச் சொந்தமான பிள்ளையார் கோயிலிலிருந்து இறங்கி, இடதுபுற வழியாகச் சென்று, நமது செட்டி தெருக்களை முழுமையாகச் சுற்றாமல் நேரடியாக பிரதான சாலையை அடைந்து, அதன் பின்னர் ஆசாரி தெரு, பட்டாரியார் தெரு மற்றும் கீழதெரு ஆகிய பகுதிகளைச் சுற்றிவந்து, இறுதியில் நமது இரணியல் மேலத்தெருவிற்கு வரும் நடைமுறை நடைப்பெற்று வருகிறது.

இது முழுமையாக நமது செட்டி சமுதாயத்திற்குச் சொந்தமான காவடி என்பதால், முதலில் நமது செட்டி தெருக்களை முழுமையாகச் சுற்றி, அந்த வழியில் அமைந்துள்ள இரணியல் மேலத்தெரு செட்டி சமுதாயத்திற்குட்பட்ட பைரவர் கோயில், முத்தாரம்மன் கோயில், திட்டை கோயில் ஆகிய தலங்களில் வழிபாடு மேற்கொள்ளப்பட்ட பின்னரே, அடுத்த பகுதிகளுக்குக் காவடி செல்ல வேண்டும்.

​ இதனால் ஏற்படும் காலதாமதம் காரணமாக, சடையப்பனார் புதுத்தெருவுக்குக் காவடி வந்து சேர மிகவும் தாமதமாகிறது. ஆகையால், இனி வரும் காலங்களில் காவடி ஊர்வலத்தின் வழிப்பாதையை மறுபரிசீலனை செய்து இந்தத் தற்போதைய வழித்தடத்தை மாற்றி, முதலில் காவடி ஊர்வலம் மேலத்தெரு வீதிக்கு வலம் வந்து, அதன் பின்னர் மற்ற தெருக்களுக்கு ஊர்வலம் சென்றால் பெருமளவு நேர விரயத்தைத் தவிர்க்கலாம். இதனால் சடையப்பனார் புதுத்தெருவுக்குக் காவடி சீக்கிரமாக வந்து சேர்ந்து, மதிய வேளையில் காவடி இறக்குவதற்கான நேரமும் பெருமளவு மிச்சப்படுத்தப்படும். வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் முன்பே காவடி இறக்கி வைக்க முடியும். 

​ஆகவே, சமுதாயம் இந்த நியாயமான கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, காவடிப் பாதையை முறைப்படுத்துவதற்குரிய ஆவண செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Petition Updates