Restoration of Pallavaram Lake against Encroachment By Government

The Issue

வணக்கம்,

பல்லாவரம் பெரிய ஏரியை அரசே கால் நூற்றாண்டிற்கும் மேலாக மலை போல் குவிக்கப்பட்டுள்ள குப்பை மேடுகளால் ஆக்ரமித்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

தலைநகரின் தெற்கு பிராந்தியத்தின் மிக முக்கிய பகுதியில் இப்படி ஒரு பெரிய நீர்நிலை சீர்கெட்டிருப்பது அரசுக்கும், நிர்வாகத்திற்கும் பெரும் அவப்பெயர்.

இந்த ஏரியை புனரமைத்து அதன் கறைகளை வலுப்படுத்தி, கரைகள் மற்றும் கால்வாய்களை நெறிபடுத்தி ஒரு அழகிய சுற்றுலாத்தலமாக படகு குழாம் அமைத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு நல்ல வருவாய் ஈட்டித்தர முடியும்.

சுற்றுப்புற மக்களும் அவ்வப்போது இளைப்பாறுவதற்கு நல்ல ஒரு சூழலியல் பூங்காவாகவும் இதை பொலிவுற செய்யலாம். எனவே இந்த அவலநிலை இனியும் வேண்டாம். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் இந்த ஒரு பெரிய நீர் நிலையை மீட்டெடுத்து மக்களுக்கும், அரசுக்கும் பயனுற வகையில் அதை புதுப்பித்து பாதுகாத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இத்துடன் சேர்க்கப்பட்டுள்ள செயற்கைகோள் படம் மற்றும் புகைப்படங்கள் ஏரியின் தற்போதைய நிலையை அதன் நீர் பிடிப்பு பகுதியின் முக்கால் பங்கு குப்பை படலத்தில் மூடியிருப்பதை தெளிவாக காட்டுகிறது

கீழ்கட்டளை ஏரி மற்றும் பல்லாவரம் பெரிய ஏரிகளின் புனரமைப்பிற்காக சென்ற ஆண்டுகளில் நிதியாக 14 கொடியே 90 லட்சம் ருபாய் பல்லாவரம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டும் இந்த நிதிக்கு தகுந்தவாறு ஏரிகளின் கால்வாய்கள் மற்றும் கரைகள் சரிவர புதிப்பிக்கப்படாமல் இருப்பது அவைகளின் தற்போதைய நிலையிலிருந்தே நன்கு தெரிகிறது. பொதுப்பணித்துறை மூலம் வழங்கப்பட்ட NOC யின் Boundary Tampering including Enroachment என்ற அனைத்து புனரமைப்பு சாராம்சங்களையும் பல்லாவரம் நகராட்சி புறக்கணித்து இந்த செயல்பாடுகள் அரங்கேறி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. எனவே இந்த திட்ட பகுத்தாய்வின் பின்னணியில் உள்ள முறைகேடுகளை தக்க ஆணையம் அமைத்து உரிய விசாரணை நடத்தி, முறைகேட்டாளர்களை சட்டத்தின் முன் தவறாமல் நிறுத்தும்படியாகவும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் தங்கள் நிர்வாகம் மாசில்லா மதுரமாய் மற்ற அமையப்பெறும். அது இந்த நிலத்தின் குடிகளாகிய எங்களுக்கும் பெருமை சேர்க்கும்.

நன்றி.

#savepallavaramlake
#justiceforpallavaramlake
#the_lake_belong_life

avatar of the starter
Dinesh BaskerPetition Starter
This petition had 250 supporters

The Decision Makers

Tamilnadu goverment
Tamilnadu goverment

Petition Updates