Save Tamilnadu Football

Save Tamilnadu Football

The Issue

தமிழக கால்பந்தை யார் காப்பாற்றுவது? (Thread)

ஏற்கெனவே சென்னை கால்பந்து சங்கம், தமிழ்நாடு கால்பந்து சங்கம் இரண்டுக்கும் இருக்கும் பிரச்னையால் சென்னை லீக் நடக்காமல் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது இப்போது சந்தோஷ் டிராபிக்கான அணி தேர்விலும் சிக்கல்! அந்த தொடருக்கான தமிழ்நாடு அணி தேர்வில் சுமார் 450 வீரர்கள் கலந்துகொள்ள, 45 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தங்கள் மாவட்ட வீரர்கள் இல்லையென, மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கொடி தூக்க மீண்டும் அணித் தேர்வு நடக்கப்போகிறது வரும் 29-31 நடக்கும் இந்த செலக்‌ஷனுக்கு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் 3 வீரர்களை மட்டுமே அனுப்பவேண்டும் என்று அறிவித்திருக்கிறது தமிழ்நாடு கால்பந்து சங்கம்.இதனால் பல திறமையான வீரர்கள் பாதிக்கப்படுவார்கள்.தேர்வுக்கு வருபவர்களுக்கு,இவர்கள் எந்த வசதிகளும் செய்துகொடுக்கப்போவதில்லை 

திறமையான அணி தமிழ்நாட்டுக்கு ஆடவேண்டும் என்பதைவிட தங்கள் மாவட்ட வீரர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்கள் அணியில் இருக்கவேண்டும் என்பதில்தான் நிர்வாகிகள் அக்கறை செலுத்துகிறார்கள். வீரர்கள் நலன் பற்றி இந்த நிர்வாகிகளுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை 

தேர்வு செய்யப்பட்ட அணி கலைக்கப்பட்டதால், அணியின் பயிற்சியாளர் விலகியுள்ளார். திறமையான ஒரு பயிற்சியாளரையும் இழந்துள்ளது தமிழ்நாடு அணி. போக, சந்தோஷ் டிராபி தொடருக்கு இன்னும் 25 நாள்களே இருக்கும் நிலையில், ஒரு அணியாக அவர்களுக்கு என்ன பயிற்சி இருக்கும்?! 

ஃபிஃபா மீட்டிங்கில் கலந்துகொள்ளும் தமிழ்நாடு கால்பந்து சங்கத் தலைவர் ஜெஸியா வில்லவராயர் தமிழ்நாடு கால்பந்துக்காக தன் சுண்டுவிரலைக் கூட நகர்த்த மறுக்கிறார். எந்தப் பிரச்னையும் தீர்வை நோக்கி நகரவில்லை. தமிழ்நாடு கால்பந்தைக் காப்பாற்ற மாற்றம் தேவை!

நன்றி @Sportsvikitan tweet 

This petition had 583 supporters

The Decision Makers

Tamilnadu sports minister
Tamilnadu sports minister
Sports Minister of India
Sports Minister of India

Petition Updates

Share this petition

Petition created on 27 October 2021