Cancel TamilNadu 12th State Board Exams

Cancel TamilNadu 12th State Board Exams
மாண்புமிகு அமைச்சருக்கு வணக்கம்!கடந்த 2 மாதமாக பல மாணவர்களின் குடும்பம் பலவிதமான இன்னல்களை சந்தித்துள்ளது. ஏனெனில் பலரின் பெற்றோரும் கடந்த இரண்டு மாதம் முழுவதுமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர், இத்தகைய சூழலில் மாணவர்கள் பெற்றோர்களின் மற்றும் தெரிந்தவர்களின் உடல்நலனை பற்றி கருத்தில் கொண்டும, பல மருந்துகள் வாங்குவதில் தங்களின் நேரத்தை செலவிட்டு உள்ளனர். இந்த இரண்டு மாதத்தில் புத்தகத்தை எடுத்து படிப்பதற்கு மிக குறைந்த காலம் கூட இருந்தது என்று கூற முடியாது. மீண்டும் படித்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேர்வு எழுதி திருப்தியில்லாத மதிப்பெண்களை பெறுவதைவிட, முன்னதாகவே எழுதி வைத்திருந்த திருப்புதல் தேர்வுகளில் மதிப்பெண்களை கருத்தில் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். CBSE தேர்வுகள் ரத்து என கூறப்பட்ட உடனே, State Board மாணவர்களும் அவர்களுக்கும் தேர்வுகள் ரத்தாகிவிடும் என்ற எதிர்பார்ப்புடன் உற்சாகத்துடனும் ஒரு புத்துணர்வுடனும் இத்தனை நாள் தேர்வு இருக்குமா இல்லையா என்ற ஒரு கேள்வியினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு சென்று விட்டுள்ளனர், அதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் சிதைக்காத படி நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு மாணவர்களுக்கு சாதகமான முடிவை எடுக்கும் என்று நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். CBSE மாணவர்களுக்கு ரத்து என தெரிந்த பிறகும் State Board மாணவர்கள் தேர்வு எழுதினால் அது கண்டிப்பாக முழுமனதுடன் எழுதுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தயவுகூர்ந்து தேர்வுகளை ரத்து செய்து விடுங்கள். நன்றி!