STOP LETTING SEWAGE IN OUR WATER BODIES

152

Let’s get to 200 signatures!
Petitions with 1,000+ supporters are 5x more likely to win!
Recent signers:
Sonali and 19 others have signed recently.

The Issue

மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள்,
தமிழ்நாடு அரசு.

 

பொருள்: சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் கலப்பதை உடனடியாக தடுக்க கோரிக்கை – தொடர்பாக.

 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,

 

தமிழ்நாட்டின் மக்கள் சார்பாக, எங்கள் ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் (Untreated Sewage) தொடர்ந்து கலக்கப்படுவது குறித்து மிகுந்த கவலையுடன் இந்த மனுவை சமர்ப்பிக்கிறோம்.

இந்த பிரச்சனை குறித்து முந்தைய அரசிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் எந்தவிதமான பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்படுகிறது.

 

இந்த நிலைமைக்கான உண்மையை வெளிக்கொணர, ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருந்து நீர் மற்றும் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பினோம். அதன் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன. அந்த பரிசோதனையில் E.Coli என்ற மனித மலக்கழிவுகளுடன் தொடர்புடைய ஆபத்தான பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. இது மனித மலக்கழிவுகள் நேரடியாக நீர்நிலைகளில் கலக்கப்படுகின்றன என்பதை தெளிவாக நிரூபிக்கிறது.

 

மேலும், இந்த கழிவுநீர் மண்ணையும் கடுமையாக பாதித்துள்ளது. இது மெதுவாக நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி வருகிறது. ICMR ஆதரவு பெற்ற ஆய்வில், மாசடைந்த ஆறு மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அருகே வாழும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் இதேபோன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன.

 

இந்த மாசுபாடு காரணமாக புற்றுநோய், தோல் நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

 

மேலும், வேங்கைவயல் சம்பவத்திற்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை மிகுந்த வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். வேங்கைவயல் சம்பவத்தில் மூன்று பேர் ஒரு நாள் குடிநீரில் மனித மலக்கழிவை கலந்ததற்காக கைது செய்யப்பட்டனர். ஆனால் அரசின் அலட்சியம் மற்றும் நிர்வாகத் தவறுகளால், தினமும் சுத்திகரிக்கப்படாத மனித மலக்கழிவுகள் ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஒரு நாள் நடந்த செயல் குற்றமாக கருதப்பட்டால், பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகளில் கழிவுநீரை கலக்க அனுமதித்துக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது. சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மக்கள் உயிர் மற்றும் உடல்நலத்துடன் தொடர்புடைய இந்த மிகப்பெரிய பிரச்சனையில் பொறுப்புடைய அதிகாரிகள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வலியுறுத்துகிறோம்.

 

எனவே, தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் அனைவரும் இணைந்து, உங்கள் அரசாங்கம் உடனடியாக:

1. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகளில் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்.
2. அனைத்து நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (STP) கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்.
3. மாசடைந்த ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. இந்த சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நலப் பிரச்சனையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்க வேண்டும்.
5. நீர்நிலைகளை மாசுபடுத்த அனுமதித்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

“நீரை காப்பது என்பது மக்களின் உயிரை காப்பதற்குச் சமம்.”

 

தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காகவும், மக்களின் உடல்நலத்திற்காகவும், உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

நன்றி,

Ashok Srinithi BE, MS (UK), LLB, LLM (UN)

தமிழ்நாட்டு மக்கள்
(கையெழுத்து இயக்கம்)

avatar of the starter
Ashok SrinithiPetition Starter

The Decision Makers

C. JOSEPH VIJAY
C. JOSEPH VIJAY
CHIEF MINISTER OF TAMILNADU

Petition Updates