Petition updateRestore Meter Gauge trains on Coimbatore Pollachi section.
தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்? பொங்கல் பரிசாக மக்கள் எதிர்பார்ப்பு

Tamil Nadu Railfans Association
3 janv. 2018
பொள்ளாச்சி;பொங்கல் விடுமுறைக்கு பொள்ளாச்சியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்செந்துார், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணி மற்றும் தொழில் நிமித்தமாக அதிகளவில் வசிக்கின்றனர்.பொங்கல் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாட, அவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். ஊர் சென்று திரும்ப வசதியாக கடந்த, 2009ம் ஆண்டுக்கு முன் வரை, பொள்ளாச்சியில் இருந்து பல்வேறு ரயில்கள் தென்மாவட்டங்களுக்கு இயங்கிக் கொண்டிருந்தன. குடும்பம், குழந்தைகள் சகிதமாக ரயிலில் பயணிப்பது வசதியாகவும், செலவு குறைவாகவும் இருந்தது. கடந்த, 2009ல் மீட்டர் கேஜ் ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டு, பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே அகல ரயில் பாதை பணிகள் துவங்கின. கடந்த சில ஆண்டுகளாக, தென்மாவட்ட மக்கள் பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போது, அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து, பொள்ளாச்சி - திண்டுக்கல் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. அப்போது, சென்னை எக்ஸ்பிரஸ், திருச்செந்துார் பயணிகள் ரயில் மற்றும் மதுரை பயணிகள் ரயில் என மூன்று ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.அதிலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறி, மதுரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்கு மேல், இரண்டு ரயில்கள் மட்டுமே இயங்கி வந்தன.இரண்டு மாதங்களுக்கு முன், திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பும் அமிர்தா எக்ஸ்பிரஸ், மதுரை வரை நீட்டிக்கப்பட்டது. அகல ரயில் பாதையாக மேம்படுத்தப்பட்ட பிறகு, இது வரை ஒரு முறை கூட பொள்ளாச்சியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், கடந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு மட்டும், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி வழியே நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான தென்மாவட்ட மக்கள் வசதிக்காக, ஓணம் பண்டிகைக்கு இயக்கியது போல, பொள்ளாச்சியில் இருந்து பழநி, திண்டுக்கல், மதுரை, திருச்செந்துார், ராமேஸ்வரம் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.ஆனால், ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சிறப்பு ரயில் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளால் பொள்ளாச்சி பகுதியை ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதாக பொதுமக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. சிறப்பு ரயில் இயக்காமல் போனால், அதிருப்தி மேலும் அதிகரிக்கும்.'ஓணம் பண்டிகைக்கு இயக்கியது போன்று, பொள்ளாச்சியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
News Courtesy - Dinamalar
Copy link
Facebook
WhatsApp
X
Email