Actualización de la peticiónRestore Meter Gauge trains on Coimbatore Pollachi section.

பழநி- கோவை, பழநி- ராமேஸ்வரம், பழநி- குமரிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்

Tamil Nadu Railfans Association
3 ene 2018
பழநி ராஜாஜி சாலையில் தமிழ்நாடு தலித் கூட்டமைப்பு இயக்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் தங்கபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கர்ணன், குப்புச்சாமி முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகி சின்ராம் வரவேற்று பேசினார். தமிழக தலித் விடுதலை இயக்க நிறுவனர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பழநி பஸ்நிலையத்தில் அம்பேத்கார் சிலை நிறுவ வேண்டும். பழநி- கன்னியாகுமரி, பழநி- கோவை, பழநி- ராமேஸ்வரம் இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் நியமனத்திலும், பழநி திருக்கோயில் பணி நியமனத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். பழநி நகரில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிற்சங்க செயலாளர் சௌந்திரபாண்டியன் நன்றி கூறினார். News Courtesy - Dinamani
Copiar enlace
WhatsApp
Facebook
X
E-mail