Petition updateRestore Meter Gauge trains on Coimbatore Pollachi section.
பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்க மறுப்பு: போராட்டத்துக்கு ரயில்வே அதிகாரிகளே பொறுப்பு!

Tamil Nadu Railfans Association
Sep 23, 2017
கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியே, ரயில்களை இயக்காமல் இருப்பதற்கு, தனியார் பஸ் உரிமையாளர்கள், தெற்கு ரயில்வே அதிகாரிகளை வலுவாக கவனித்து வருவதே காரணமென்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.போத்தனுார் - பொள்ளாச்சி இடையிலான, அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து, சோதனை ஓட்டம் நடத்தி, ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், கோவை - பொள்ளாச்சி இடையே ஒரே ஒரு பயணிகள் ரயிலை மட்டும் பெயருக்கு இயக்கி விட்டு, மற்ற ரயில்களை இயக்காமல் இழுத்தடித்து வருகிறது, தெற்கு ரயில்வே நிர்வாகம். மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்தபோது, இந்த வழித்தடத்தில் இயக்கிய ரயில்களைக் கூட, மீண்டும் இயக்க மறுத்து வருகிறது.திட்டமிட்ட புறக்கணிப்பு!கோவை - துாத்துக்குடி, கோவை-செங்கோட்டை, கோவை-ராமேஸ்வரம் இடையிலான ரயில்கள், ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டவை என்பதால், அகல ரயில் பாதை அமைக்கப்பட்டதும், இந்த ரயில்களை இயக்கியிருக்க வேண்டும்.
இதேபோல, பொள்ளாச்சியிலிருந்து கோவை வழியாக, சென்னைக்கு ஒரு ரயிலும், பொள்ளாச்சி- கோவை- மேட்டுப்பாளையம் இடையே பாசஞ்சர் ரயிலும் இயக்க வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பு.ஆனால், கோவை - பொள்ளாச்சி இடையே ஒற்றை ரயிலை, அதுவும் யாருக்கு உதவாத நேரத்தில் இயக்கி விட்டு, கொங்கு மண்டல மக்களை, வேண்டுமென்றே புறக்கணித்து வருகிறது, தெற்கு ரயில்வே. எப்போது கேட்டாலும், 'ரயில் பெட்டிகள் இல்லை; இன்ஜின் இல்லை' என்று பஞ்சப்பாட்டு பாடும் ரயில்வே துறை, பாலக்காடு வழித்தடத்தில் மட்டும் புதுசு புதுசாக சிறப்பு ரயில்களை இயக்குகிறது.பொள்ளாச்சி வழித்தடத்தில், ரயில்களை இயக்க மறுப்பதைக் கண்டித்து, ஆளுங்கட்சிகள் தவிர்த்த அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னும், பாலக்காடு-ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை இயக்கி, கோவை மக்களின் போராட்ட உணர்வையும் கொச்சைப்படுத்தியுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, செப்.,13 அன்று ரயில் மறியல் போராட்டத்துக்கும் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம், கோவை மாநகராட்சிக்கு எதிரான அனைத்துக்கட்சி தொடர் போராட்டங்கள் காரணமாக, ரயில் மறியல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அப்படியே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து போராடினாலும், தீபாவளி வரையிலும் புதிய ரயில்கள் இயக்கப்படுமா என்பது பலத்த சந்தேகமாகவுள்ளது.ஏனெனில், இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்காமல் இழுத்தடிப்பதற்கு, தனியார் பஸ் உரிமையாளர்கள் பலரும் சேர்ந்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள், சேலம், பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகளை வலுவாக 'கவனித்து' இருப்பதே காரணமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பழனி வழித்தடங்களில், நாளுக்கு 200க்கும் அதிகமான 'டிரிப்'களுக்கு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.கோவை-பொள்ளாச்சி இடையே, ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில், ரோட்டின் நிலை மிக மோசமாக இருப்பதால், வாடகை வாகனங்களே வர மறுக்கும் நிலை உள்ளது. அதனால், தனியார் பஸ்களுக்கு வழக்கத்தை விட, வசூல் தட்டி எடுக்கிறது. அதேபோல, உடுமலைக்கும், பழனிக்கும் நிறைய தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால், இந்த பஸ்கள் அனைத்துக்கும் வசூலில் பலத்த அடி விழுமென்பது நிச்சயம்.வசூல் பாதிப்பு!அதேபோல, கோவையிலிருந்து தாராபுரம் வழியாக, ஏராளமான ஆம்னி பஸ்கள், அனுமதியுடனும், அனுமதியின்றியும் மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களுக்கு இயக்கப்படுவதும் ஊரறிந்த சேதி.
இந்த ஊர்களுக்கு, ஒரு டிக்கெட் 200 லிருந்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டால், இவற்றின் வசூலும் கடுமையாக பாதிக்கப்படும்.இதன் காரணமாகவே, தனியார் மொபசல்
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X