Fill Siruvani Dam to its Full Level

Fill Siruvani Dam to its Full Level
The Issue
வணக்கம்,
கோவை பற்றி பேசினாலே சிறுவாணி தண்ணீரின் சுவையை பற்றி தான் பேசுவார்கள். 100 வருடங்களுக்கு முன்பு சரியாக 110 நீர் குழாய்களில் மட்டுமே சிறுவாணி தண்ணீர் கிடைத்து வந்தது. நமது நகராட்சி நிறுவனத்தில் கவுன்சிலராக தொடங்கி பின்னர் தலைவராக பணியாற்றிய தொலைநோக்கு பார்வை கொண்ட திரு. ரத்தினசபாபதி அவர்களின் முயற்சியினாலே சிறுவாணி தடுப்பு அணை கட்டப்பட்டது. எளிதாக கட்டப்படவில்லை. கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தில் வேலை செய்து வந்த திறமையான தொழிலாளர்களை வைத்து கட்டி முடித்தார். இன்று அளவும் அவர் கட்டிய tunnel சுரங்கம் தான் அணைக்கு தண்ணீரை கொண்டு வருகிறது. 100 ஆண்டுகள் கடந்தும்,இன்றைய மக்கள் தொகைக்கும் வேலை செய்கின்றது என்றால் திரு. ரத்தினசபாபதி அவர்களின் தொலைநோக்கு பார்வை மெய்சிலிர்க்க வைக்கிறது. 100 வருடங்களுக்கு முன்பு, எந்த வித வசதியும் இல்லாத போது, திரு. நரசிம்மலு அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று தடுப்பு அணை கட்ட சுற்று நோட்டமிட்டு (survey) வந்ததையும் பாராட்டியே ஆக வேண்டும். தடுப்பு அணை கட்டும் போது, பலத்த மழை பெய்து முழு அமைப்பும் நொறுங்கியது. தன் விடாமுயற்ச்சில் அணையை கட்டி முடித்தார். 1980 களில் 55 அடி பெரிய அணை கட்டப்பட்டு, இன்று அளவும் வலிமையாக உள்ளது. இதை பராமரிக்க தமிழ்நாடு அரசாங்கம் கேரளா அரசாங்கத்திற்கு நிதி வழங்கி வருகிறது. சிறுவாணி அணையின் முழு அளவு என்பது 49.5 அடி ஆகும். முழு அளவை நிரப்பினால், ஒவ்வொரு நாளும் 1014 லட்ச லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும். ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பெய்ய கூடிய தென்மேற்கு பருவமழையை வைத்தும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்ய கூடிய வடகிழக்கு பருவமழை வைத்தும், சிறுவாணியின் முழு அளவான 49.5 அடி வரை நீரை நிரப்பி விடமுடியும். அப்படி செய்தால், அடுத்த ஆறு மாதங்களுக்கு தினமும் 1014 லட்ச லிட்டர் தண்ணீரை எடுக்க முடியும். ஆனால் 2018 வெள்ளத்திற்கு பின்பு, கேரளாவில் உள்ள அணைத்து அணைகளிலும் முழு அளவிற்கு தண்ணீர் நிரப்ப வேண்டாம் என்று கேரளா அரசாங்கம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. சிறுவாணி அணை கேரளாவில் உள்ளதால் இந்த உத்தரவு சிறுவாணிக்கும் பொருந்தும். இதனால் 42 அடி வரையே தண்ணீர் நிரப்படுகிறது. அணை (தண்ணீர் தேங்கி இருக்கும் பரப்பு) என்பது V வடிவில் இருக்கும். மேல் 5 அடிகளில் தான் அணையின் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை சேமிக்க முடியும். கேரளா அரசின் உத்தரவு படி சென்ற ஆண்டு 5-6 அடி வரை தண்ணீர் நிரப்பாமல் விட்டதால், இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொடக்க மாதங்களான டிசம்பர் ஜனவரி மாதங்களிலேயே 800 முதல் 900 லட்ச லிட்டர் தண்ணீர் தான் எடுக்க முடிந்தது. அது படி படியாக குறைந்து ஏப்ரல் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 500 லட்ச லிட்டராகவும், மே மாதத்தில் 400 லட்ச லிட்டராகவும், கடைசியில் ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு வெறும் 300 லட்ச லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைத்தது. இதனால் தான் இந்த வருடம் தண்ணீர் தட்டுப்பாடு வந்தது. இது அடுத்த வருடமும் தொடராமல் இருக்க சிறுவாணி அணையின் முழு கொள் அளவிற்கு தண்ணீர் நிரப்ப வேண்டும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது, தமிழ்நாடு அரசாங்கம் கேரளா அரசாங்கத்திற்கு அழுத்தம் தர வேண்டும் என்றும், கேரளா அரசாங்கம் சிறுவாணியின் முழு அளவிற்கு தண்ணீர் நிரப்ப அனுமதி தர வேண்டும் என்று கோவை மக்கள் கேட்டுக்கொள்கிறோம்.
Coimbatore is an exquiste city widely known for the siruvani water that quenches the thirst of majority of the city population. The Siruvani Reservoir Dam is one of the main sources of water to the city. The Kerala government however has issued orders not to fill any dams to its full capacity, citing safety reasons which were enforced on the Siruvani Dam as well. Nevertheless Siruvani Dam is covered by an interstate agreement to meet the drinking water supply of Coimbatore.
The kerela Government should generally fill the reservoir level to 49.50 feet at its maximum, but abstained from doing so. The heavy 4500 mm rainfall from the South West monsoon season areas are being diverted to various canals in the state even before the dam can reach full capacity. But on request from the TamilNadu Government, they had opened the sluices to let the water level rise. But they had also reinforced that the water level would remain at 45 feet.
The South West monsoon from June to October and the North East Monsoon between October – November are the main sources of water retention for the Siruvani Reservoir. But unless the total capacity is filled at 49.50, the water demand of Coimbatore throughout the summer of 2021 would not be fulfilled. The last water level capacity was recorded at 42 feet, which has brought about some deficit in the present year’s water demand. Unless our request is fulfilled, we would have to suffer yet another year’s water deficit. We request the Kerala Government to fill water to the fullest level in Siruvani Dam.

Petition Closed
Share this petition
Petition Updates
Share this petition
Petition created on 12 July 2020