தமிழக அரசே, மின்வாரியத்தில் 10,000 கேங்மென் பணியிடங்களை உடனே நிரப்புக ...
தமிழக அரசே, மின்வாரியத்தில் 10,000 கேங்மென் பணியிடங்களை உடனே நிரப்புக ...
தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள 10 ஆயிரம் கேங்மென் காலியிடங்களை நிரப்புக, வேலை தேடும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கிடு என்ற கோரிக்கைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மத்திய சென்னை மாவட்டக்குழு தங்கள் ஆதரவினைக் கோருகிறது.
கோரிக்கைகள்:
1. மின்துறை அமைச்சர் அறிவித்தபடி தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ள 10 ஆயிரம் கேங்மென் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
2. கொரோனா காரணமாக மார்ச் 2020ல் நிறுத்தி வைக்கப்பட்ட 2900 கள உதவியாளர்கள் (ITI), 575 உதவி பொறியாளர்கள் (AE), 500 இளநிலை உதவியாளர்கள் (JA), 1300 கணக்கீட்டாளர்கள் (ASSESSOR) காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவை உடனே துவக்கிடு.
3. 4500 கணக்கீட்டாளர்கள்(ASSESSOR) 2500 தொழில்நுட்ப உதவியாளர் (TA) பணியிடங்களை உடனே நிரப்பிடு 4. 3000க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர் (AE) பணியிடங்களை உடனே நிரப்பிடு.
5. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய காலிப்பணியிடங்களில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கிடு.
6. மின்வாரியத்தை அவுட்சோர்சிங் என்ற பெயரால் தனியார்மயம் ஆக்காதே.
வரும். நவம்பர் 10, 2020 அன்று அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பு இக்கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இந்த முயற்சிக்கு தங்கள் ஆதரவை வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
அன்பும் நன்றியும்.