Mr. Vijay Sethupathi - Don't play with Tamils emotions - Stop acting from 800 Movie

The Issue
800 படக்குழுவினருக்கு எச்சரிக்கை
இலங்கை "பேரினவாத" கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுதிரைப்படத்தில் , நடிகர் விஜய் சேதுபதி நடித்து நேற்று வெளியாகியிருக்கிற அதன் முன்னோட்ட விளம்பரபடங்கள் ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனத்தின் உணர்வுகளை புண்படுத்தியிருக்கிறது.
தமிழர்கள் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான இனஅழிப்பை சந்தித்த தேசிய இனம் ,அறத்திற்கு புறம்பானவழியில் அழித்தொழிக்கப்பட்ட இனம்.
இப்படியொரு இனஅழிப்பை முன்னின்று நடத்திய வல்லாதிக்க நாடுகள், அதன் அடுத்த கட்டமாக தமிழர்களது விடுதலை போராட்டத்தையும், போராட்ட நியாயங்களையும் கொச்சைப்படுத்துகிற பின்தள வேலைகளையும் செய்யத் தொடங்கியிருக்கிறது.
தமிழக, தமிழீழ அரசியல் தளங்களில் அதிகரித்து வரும் இளைஞர்களின் பங்களிப்பு , புலம்பெயர் / தமிழகத்தில் விரிவடைந்து வரும் தமிழ்த்தேசிய சிந்தனையிலாளர்கள் திரள் , சர்வதேச மட்டத்தில் தமிழர் தரப்பு தருகிற அழுத்தங்கள் உள்ளிட்டவற்றிற்கான எதிர்வினையாகவே இப்படியான உத்திகளை மேற்குலக நாடுகள் கையிலெடுதிருப்பதை தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறோம்.
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை பயங்கரவாதத்திற்கெதிரான போர் என நியாயப்படுத்திய இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள், தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று அதை உளவியலாகதமிழர்கள் மீது திணிக்கவும் முற்படுகின்றனர். ஏனெனில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தமிழ்த்தேசிய எழுச்சி இவர்களை உள்ளூர அச்சப்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்தது, எரிக் சொல்கைம்ன் வரலாற்றுத் திரிபுவாதங்கள், தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பு , வெடுக்குநாறி மலை வேள்விவழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு, யாழ் பல்கலையில் நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட சிங்களத்தின்அடுத்தடுத்த நகர்வுகள் நமக்கு உணர்த்துவதும் அதுவே.
இனஅழிப்புக்குள்ளாகி பத்தாண்டுகள் கழிந்த பின்னரும் அதற்கான எதிர்வினையாற்ற முடியாத, மீளெள இயலாத நிலையிலே நம்மை வைத்திருக்கவே இப்படியான உளவியல் நெருக்குவாரங்களை நம்மிடம் திணிக்கின்றனர். அதன் படிநிலையாகவே திரைப்படங்களில் தமிழீழத்திற்கு எதிரான, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கெதிரான கருத்துக்கள் வலிந்து திணிக்கப்படுகின்றன.
இப்படியான சூழ்நிலையிலேயே நடிகர் விஜய் சேதுபதியின் 800 திரைப்பட முன்னாேட்ட விளம்பர படங்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கெதிரான காட்சிகளோடு, ஒரு தேசிய இனத்தின் விடுதலைபோராட்டத்தை முறையற்ற வழியில் அடக்கி, இரண்டு இலட்சம் பேரை இனஅழிப்புக்குள்ளாக்கிய இலங்கை இனவெறி அரசின் சிங்கள கொடியை தாங்கிய சீருடையோடு காட்சிகள் வெளியாகியிருக்கிறது.
இலங்கை அரசின் ஆசியோடு DAR motion pictures தயாரித்திருக்கிற 800 திரைப்படம் இந்த நிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வள்ளுவப்பண்பாட்டு நடுவம் வலியுறுத்துகிறது.
தமிழகம், புலம்பெயர் தேசங்கள் உள்ளிட்ட எந்த இடங்களில் இந்தப்படம் திரையிடப்பட்டாலும் திரையரங்குகள் தமிழர்களால் முற்றுகையிடப்படும் எனவும் , நடிகர் விஜய் சேதுபதியின் வீடு மற்றும் மும்பையில் உள்ள DAR படத்தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவை முற்றுகையிடப்படும் எனவும் வள்ளுவப்பண்பாட்டு நடுவம் எச்சரிக்கிறது.
மேலும் தமிழர்களின் ஆள்மன உணர்வை புண்படுத்துகிற, தமிழகத்தின் சட்டம் ஒழுங்ககை குலைக்கக்கூடிய இத்திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எமது நடுவம் கோருகிறது.
அரசியல் துறை
வள்ளுவப்பண்பாட்டு நடுவம்

Petition Closed
Share this petition
The Decision Makers
Petition created on 14 October 2020