கையெழுத்துப் பரப்புரை !

கையெழுத்துப் பரப்புரை !
The Issue
தமிழக அரசே!
சாதிய - ஆணாதிக்க "ஆணவப்படுகொலை" மற்றும் குற்றங்களுக்கு எதிராக உடனடியாக "சிறப்புச் சட்டத்தை" இயற்றுக!
'சாதிப் பெருமை' பெரிது என்று தான் பெற்ற பிள்ளைகளையும், அவர்கள் தேர்ந்தெடுத்தத் துணையையும் படுகொலை செய்கின்றனர் பெற்ற தாய்,தந்தையர்களே! பெற்றோர்களும் உறவினர்களும் இத்தகையக் கொடூரச் செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.
பல்வேறு ஆணவக் கொலைகள் இன்று வரை பதிவு செய்யப்படாமலேயே இருப்பதும், பதிவு செய்யப்பட்டவை தண்டனை பெறாமலும், இன்னும் பல
சமூக கவனத்திற்ககே கொண்டு வரப்படாமலும் இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சமீபத்தில் நடந்த ஆணவப்படுகொலைகள் ..
தமிழ்நாட்டையே உலுக்கியப் போதிலும் எவ்வித தயக்கமும் அச்சமும் சிறிதும் இல்லாமல் அடுத்தடுத்து இதுபோன்றப் படுகொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இப்படுகொலைகளுக்கு காரணம்? பெரும்பாலும், 'சாதிப் பெருமை', பிற சாதியினர் மீதுள்ள 'வெறுப்பு', பட்டியலின மக்களின் மீதான 'தீண்டாமை உணர்வு , சாதி ஆதிக்கத்தை தொடர்ந்து நிறுவ வேண்டும் என்கிற மனப்பான்மை', பெண்பிள்ளைகள் தங்களது துணையைத் தாமே தேர்ந்தெடுக்கக் கூடாது, குறிப்பாக பிற சமூகத்தைச் சார்ந்த ஆடவரைக் காதலிக்கக் கூடாது என்கிற 'ஆணாதிக்கச் சிந்தனை' போன்றவைகளே இப்படுகொலைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன.
மாற்றுச் சாதியில் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் பட்டியலினம் சார்ந்த ஆண்களைக் காதலிக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சாதிய ஆணாதிக்க மனப்பான்மை ஆணவக் குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் வழி வகுக்கிறது.
ஆணவக்கொலைக்குச் சிறப்புச் சட்டம் ஏன் அவசியம்?
ஏற்கனவே உள்ள தண்டனை சட்டங்களின் கீழ் ஆணவக்கொலை மற்றும் ஆணவக் குற்ற வழக்குகள் பதியப்படும் போதும், தீர்ப்புகள் வழங்கப்படும் போதும் அவை ஆதிக்க மனப்பான்மை, சாதிய, ஆணாதிக்க மற்றும் வெறுப்புக் கண்ணோட்டத்தில் இருந்து வழக்கின் வீரியத்தை மழுங்கடிக்கச் செய்வதாக இருக்கிறது.
கொலையாளிகளையும் அவர்களுக்குப் பின்புலமாக உள்ள சாதியக் கட்டமைப்புகளையும் காப்பாற்றிவிடும் போக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக வழங்கப் பெற்ற தீர்ப்புகளில் முக்கியமானதாகக் கருதப்படும் "சக்தி வாகினி vs இந்திய ஒன்றியம்" வழக்கில் உச்ச நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை வழங்கி, ஆணவக் கொலைக்கு எதிரானச் சிறப்புச் சட்டத்தை அனைத்து மாநிலங்களும் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் ஆணவக் கொலை என்பது மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்றும் அவ்வழக்கில் உச்ச நீதி மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஆணவக்குற்றங்களைத் தடுக்க,
தடுப்பு நடவடிக்கைகள் (Preventive)
திருத்தும் நடவடிக்கைகள் (Remedial)
தண்டனை நடவடிக்கைகள் (Punitive)
போன்ற வழிகாட்டுதல்களையும் விரிவாக தனது தீர்ப்பில் வழங்கியுள்ளது.
ஆணவக்கொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் இல்லாதவரை, பல வழக்குகள் பதிவு பெறமாலேயே மறைக்கப்படும், போராடி பதிவு செய்யப்பட்டாலும், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வழக்குகள் வலுவிழந்து குற்றவாளிகள் தப்பிச் செல்ல ஏதுவாக இருக்கும்.
ஆணவக்கொலைக்கு எதிரான சிறப்புச் சட்டம், பட்டியலின மக்களுக்கான நீதியாக மட்டுமல்லாமல், பெண் உரிமை காக்கவும் , பிற சாதிகளுக்குள் நடக்கும் தன்சாதி ஆணவக் கொலைகளுக்கும் தீர்வு வழங்க ஏதுவாக அமையும்.
எனவே ஆணவக் கொலைகளைக் தமிழ்நாடு அரசு சாதாரணமாக கடந்து செல்லக் கூடாது என்பதால், ஆணவக் கொலை மற்றும் அது சார்ந்த குற்றங்களுக்கு எதிராக, உடனடியாகச் சிறப்புச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்று மனசாட்சியுள்ள தமிழ்நாடு மக்களாகிய நாங்கள் இப்பரப்புரை வாயிலாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றோம்!

99

Petition Updates
Share this petition
Petition created on 14 June 2026