Petition updateRestore Meter Gauge trains on Coimbatore Pollachi section.

'பொள்ளாச்சி ரயில்வே பகுதிகளை சேலம் கோட்டத்தில் இணைக்கணும்'

Tamil Nadu Railfans Association
Oct 3, 2017
பொள்ளாச்சி வட்டாரசிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில் மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில்பாதையாக மாற்றியபின் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ , மாணவியர், வேலைக்கு செல்பவர்கள் என யாருக்கும் பயன்படாத நேரத்தில், ஒரே ஒரு ரயில் மட்டும் கோவை - பொள்ளாச்சிக்கு இயக்கப்படுகிறது.கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரம், திருச்செந்துார் வரையும்; பொள்ளாச்சியிலிருந்து கோவை வழியாக சென்னைக்கும் இரவு நேர ரயில் போக்குவரத்து வேண்டும் என்பது அனைத்து தரப்பினரது கோரிக்கையாக உள்ளது. கோவைக்கு, பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப, காலை, 8:00 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு, கோவை செல்ல வேண்டும். அதே போல, மாலை, 5:00 மணிக்கு மற்றும் இரவு, 7:00 மணிக்கும் கோவை - பொள்ளாச்சிக்குரயில் இயக்க வேண்டும்.மக்களின் தேவைக்கு ஏற்ப ரயில் போக்குவரத்து நேரம் நிர்ணயிக்கப்படாமல் இருப்பதாலும், ரயில்கள் பல பகுதிகளுக்கு அதிகப்படுத்தாமல் இருப்பதற்கும், பொள்ளாச்சி பகுதி பாலக்காடு கோட்டத்தில் இருப்பதுதான் காரணம் என அனைத்து தரப்பினரும் கருதுகின்றனர். எனவே, பொள்ளாச்சியை, பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து, சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://m.dinamalar.com/detail.php?id=1867482
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X