Petition update#GoBackPepsi; Save Thamirabarani? ? ? ? ? ?
Youngsters NellaiTirunelveli, India
Nov 6, 2015
நம் மூச்சிலே இதுவே ஜீவநதி :- தமிழர்களுக்கு ஒரு நிலமே தமிழகம். தமிழர்களுக்கு ஒரு மொழியே தமிழ். தமிழுக்கு ஒரு கடவுள் முருகன். தமிழர்களுக்கே ஒரே நதி அதுவே நம் தாமிரபரணி. நீளவாக்கில் நூறு கி.மீ களுக்கு ஓடும் நதியை, கொஞ்சம் சர்க்கரை, பூச்சிக்கொல்லியை, ஒரு புட்டியில் கலந்து, நமக்கு நீட்ட போகிறார்கள். யோசிக்கவே பயங்கரமெனில், அதை செயல்படுத்தினால் எவ்வளவு நிகழும் என்று யூகிக்க முடிகிறது. நம் கண்முன்னே, நமது தலைமுறையில் ஒரு பாலை நிலத்தை படைக்க போகிறதா! நம்மிடம் ஓடிக்கொண்டிருக்கின்ற நதிகளுக்கு, நாம் தாமிரபரணி மட்டுமே போராடமல் இருந்தோம். இன்று அந்த அபாயத்திற்கும் வந்து விட்டோம். அதிகப்பட்சமாக வெறும் ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும்,குளிர் பான ஆலைகளுக்கு, லட்சகணக்கான மக்கள் குடிநீரின்றி அவஸ்தை பட போகிறோம். அதுவே நடக்கவும் போகிறது. நாம் தண்ணீர் இன்றி துடிக்கவே போகிறோம். தூத்துக்குடி உப்பளங்களில் வேலை பார்க்கும், உலர்ந்த உதடுகளுக்கு, இனி பெப்சியும், கோக்கும், தாகம் தணிக்க போகிறதா? பக்கத்து மாநிலமான ஆந்திரா, தன்னுடைய உள்நாட்டு நதிகளை இணைத்துக் கொண்டு வரும்வேளையில், நாம் நம்முடைய நதியை விற்றுக் கொண்டு வருகிறோம். நீர் மேலாண்மையில் பெரியதாக இதுவரை சேமிக்காத நிலையில், நீரை ஊறிஞ்சும் குளர்பான ஆலைகள் நமக்கு தேவையா? இங்கே பெப்சி, கோக் மீது, அப்படியொன்றும் நாவறட்சி ஏற்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே பாசனவசதிகள் இன்றி விளைநிலங்கள் சுருங்கி கொண்டு வருகிறது. நெல் விளைந்த பூமியில் கட்டிடங்கள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தென்மாவட்டத்தில், ஆதார ஸ்ருதியாய் ஓடும் தாமிரபரணி படுக்கையில், ராட்சஸ நீர் உறிஞ்சி நிறுவனங்கள் அறவே தேவையற்றது. ஒரு குளிர்பான நிறுவனம் நிலை நிறுத்தும் பொருளாதாரத்தை, லட்ச விவசாயிகளை ஒன்றிணைத்தால் நிவர்த்தி செய்து விடுவார்கள். மருந்துகளையும், பிற உபகரணங்களையும், தங்கள் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யும் மேலை நாடுகள், உணவு பொருட்களை மட்டும், இங்கே வந்து கூடராமிட்டு உற்பத்தி செய்யவேண்டிய நோக்கம் என்ன? பணமே சம்பாதிக்க வேண்டிய இருந்தாலும், அவன் தாய் நிலத்தை பாழ் படுத்திக்கொள்ள, அவனுக்கு சம்மதமில்லை. இதை ஏன் இங்கிருப்பவர்கள் மட்டும் உணரவில்லை?
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X