ஏழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை

ஏழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை

தமிழக சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலை குறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதிலளிக்கையில், 7 பேர் விடுதலை விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதில் ஆளுநருக்கு அனுப்பி இருந்தோம். அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும், இறுதி முடிவும் ஆளுநர் எடுக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு தீர்மானம் குறித்து ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
MDMA என்ற புலனாய்வு அமைப்பின் அறிக்கை வந்த பிறகு 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் என அமைச்சர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் MDMA புலனாய்வு அறிக்கைக்கும் 7வர் விடுதலைக்கும் எந்த தொடர்புமில்லை.
உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது இது முழுக்க முழுக்க மாநில முதலமைச்சர் அதிகாரத்தில் உள்ளது. இதில் ஆளுனர் ஒப்புதல் கையெழுத்து மட்டுமே தேவை. அதனால் தமிழ்நாடு முதலமைச்சரவை ஆளுனர் இதற்கு மேலும் கால தாமதம் செய்வது ஆளுநரை காரணம் காட்டி இந்த அரசியல் அமைப்பு தமிழர்களுக்கு அநீதி இழைப்பதாக தமிழர்கள் உணர்கிறோம். இதற்கு மேலும் காலம் தாமதிக்காமல் விரைந்து எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழர்குடிகளும் வேண்டுகோள் வைக்கிறோம்.
Edappadi K Palaniswami
#ஏழ்வரை_விடுதலை_செய்
#Release7TamilsNow
#TNCM_ReleasePerarivalan