Mandatory Free Toilet Facility in All Public places and Commercial Places

Mandatory Free Toilet Facility in All Public places and Commercial Places

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!
Balaji Ramasubbu started this petition to People of Tamilnadu

தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் மக்கள் பூர்வ குடிகளாய் வசிக்கிறார்கள். இந்த மக்களில் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 20 % சதவிகிதம் பேர் ஒவ்வொரு நாளும் வேலை நிமித்தமாகவோ ,பொருட்கள் வாங்கவோ , சுற்றுலாவிற்காகவோ , உறவினர்களை பார்க்கவோ , மருத்துவத்திற்க்காகவோ , கோவில்களுக்கு , மற்றும் சொந்த காரணங்களுக்கு என்று பயணம் செய்கிறார்கள். இது இல்லாமல் , வேலை செய்வதற்காகவும் , சுற்றுலாவிற்காகவும் , மருத்துவத்திற்காகவும் , நித்தம் நித்தம் வெளிமாநிலத்தவர் , வெளிநாட்டவர் பலலட்சம் பேர் வந்து போகிறார்கள் . அதாவது கிட்டத்தட்ட 1 கோடியே 50 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். பயணம் செய்பவர்களில் கிட்டத் தட்ட 30 % பெண்கள், அதாவது 50 லட்சம் பெண்கள். இவர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் , வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் களைப்பிற்க்காகவும் , உணவருந்தவும் , கழிவுகளை நீக்கவும் , உணவகங்களில் நிற்ப்பது வாடிக்கை.

அடுத்த தொழில் வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடிய நம் தலைவர்களுக்கு இந்த எண் தெரிகிறது .where there is crowd there lies an opportunity . இதை தான் நம்ம தலைவர்கள் ஒரு வாய்ப்பாய் பார்த்தார்கள். பயணிக்கும் ஒவ்வொரு பேருந்தும் ஒரு சில குறிப்பிட்ட சாலையோர உணவகங்களில் நின்று செல்லும்படியாய்ச் செய்தார்கள். நிற்கும் உணவகங்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்களும் , கவனிப்பவர்களும் நடத்துவது என்பது இங்கு பலருக்குத் தெரிந்து இருக்கும். இங்கே தான் ஒரு பிரச்சினை உள்ளது. நிற்கும் ஒவொவ்ரு பெருந்திற்கும் உணவகம் நடத்தும் முதலாளி 40 ரூபாய் வரை கவனிக்க வேண்டுமாம். நிற்கும் பேருந்துகளின் நம்பர் பிளேட் என் குறிக்கப்பட்டு , அந்த பேருந்துக்காக கட்டிங் கொடுக்கப்படுகிறது . இந்த மாதிரி உணவகங்களில் பேருந்து நின்றால், கவனியுங்கள் , பேருந்து எண்ணை ஒருவர் குறித்துக் கொண்டு சிகரெட்டோ,பாக்கோ, சாக்கலேட்டோ கொடுப்பார்கள். இங்கு தான் பிரச்சினையே. விழுப்புரத்தில் இருந்து எடுத்த வண்டியையை விக்கிரவாண்டியிலோ அல்லது திண்டிவனத்திலோ நிறுத்தினால் மக்கள் எப்படி வாங்குவார்கள் ? மேலும் பெரும்பாலான மக்கள் இந்த உணவகங்களில் உணவில் தரம் இல்லை என்றும் , விலை அதிகம் என்றும் வாங்குவதே இல்லை.

மக்கள் வாங்க வில்லை என்றால் , லாபம் எப்படி வரும் கமிஷன் எப்படி கொடுப்பது ? வாங்கினாலும் வாங்காவிட்டால் கமிஷன் கொடுத்து தானே ஆக வேண்டும் !!! விலையை இதற்கும் மேல் ஏற்றினால் 5 நட்சத்திர உணவகத்திற்கு இணையாய் விலை போய் விடும் . பேருந்தில் செல்பவன் வாங்குவானா ? மூளையை கசக்கியத்தில் கிடைத்தது யோசனை.

உள்ள போகாட்டி என்ன ? வெளியே போய் தானே ஆக வேண்டும்? ஆம் மக்கள் வாங்கி சாப்பிடாமல் இருந்தாலும் , நிச்சயம் உச்சா போவானுள்ள ? பிடிச்சான் பாரு பிசினஸ் . ஆம் இன்றும் பெரும்பாலும் சாலையோர உணவுகளின் பெரும் வருமானம் உங்கள் உச்சா போக நீங்க செலுத்தும் கட்டணத்தில் இருந்தது தான் வருகிறது. ஆண்களாவது பரவாயில்லை பொது வெளியில் செல்வார்கள் . பெண்கள் எங்கே போவார்கள் ? இவர்களின் கண்கள் எல்லாம் பயணம் செய்யும் 50 லட்சம் பெண்கள் மீதும் தான் உள்ளது. வருமானத்தை ஏற்ற இவர்கள் உச்சா செல்ல நாம் செலுத்தும் கட்டணத்தை 5 ரூபாயாக ஏற்றி விட்டார்கள். இவர்கள் இல்லாமல் ஆண்களில் குறைந்தது ஒரு 30 லட்சம் பேராவது இந்தக் கட்டணக் கழிப்பிடத்தை பயன்படுத்துகிறார்கள் . ஆக மொத்தம் 80 லட்சம் பேர் . அதாவது நாள் ஒன்றுக்கு 4 கோடிவரை வசூல் தூள் பறக்குது.

வருதத்திற்கு இது 1500 கோடி ரூபாய்!!! இந்த 1500 கோடி ரூபாயும் மொத்தமே 500 ருக்கும் குறைவான உணவகளுக்குத் தான் செல்கிறது . அதவாது ஒவ்வொரு உணவகமும் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள் !!! இவர்களில் இருந்து வரும் கமிஷனில் நம்ம தலைவர்கள் 100 கோடிவரை சம்பாதிக்கிறார்கள்!!!!

நேற்று இந்த 5 கொடுக்க முடியாமல் , இதைப் போன்ற ஒரு உணவகத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு பெண் பொது வெளியில் சிறுநீர் கழிக்க வேண்டியக் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். பொது வெளியில் சிறு நீர் கழிக்கச் சென்ற அந்தப் பெண்ணிடம் அந்த உணவகத்தில் , தூய்மை இந்தியாக் காவலர் , அதாங்க , பாத்ரூம் , யூரின் போறவங்க எல்லாம் உள்ளெ போங்க என்று கூவு வாரே அவர்தான் . கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அந்தப் பெண் 5 ரூபாய் இருந்தால் ஒரு வடையை வாங்கிச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்வேன் என்றார். எழிலை அல்லாமல் ஏழ்மையை தோற்றத்தில் கொண்ட அந்தத் தாயின் வார்த்தை என் நெஞ்சைத் தைத்தது.

கவரி மான்களை பேசும் நாம் , பெண்ணியம் பேசும் நாம் , பெரியாரிஸம் பேசும் நாம் , பெண்ணுரிமை பேசும் நாம் , இன்று ஊழலால் , கமிஷனால் ,ஒரு பெண்ணை பொதுவெளியில் சிறுநீர் கழிக்க வைத்து விட்டோம் .மானத்தை வாங்கி விட்டோம் . பொது வெளியில் சிறுநீர் கழிக்கும் பெண்ணின் கண்ணியத்தை கண்டம் பண்ணி ஒரு நபருக்கு மௌன பார்வையாளனாக துணை நின்று விட்டோம் . அதற்கும் சுகாதாரம் என்று வியாபாரத்திற்காக பொய் பேசி உச்சா போகும் உரிமையை மறுக்கிறோம். ஒரு கூட்டமாய் பலியாகும் மானை வேடிக்கைப் பார்க்கும் மற்ற மான்களை போல் வேடிக்கை பார்க்கிறோம்.

உணவை ஓசியாய் கொடுக்கும் நாம் , ஏன் கழிப்பிட வசதியை இலவசமாய் கொடுக்க மறுக்கிறோம் . அமெரிக்க பெருமை பேசும் நாம் , அங்கே இது போன்ற சில்லறைத்தனமான அதிகார துஷ்பிரகோகங்கள் இல்லை என்பதை ஏன் பேசத் தயங்குகிறோம் ?

அந்த ஏழைத் தாயின் நிலைமை பிறருக்கு ஏற்படாமல் இருக்க , நம் மக்களின் மானம் காக்க , இலவசக் கழிப்பிட வசதியை நம் மாநிலம் முழுவதும் ஏற்படுத்த இந்த கோரிக்கையை நான் உங்கள் முன் வைக்கிறேன் . பொது இடங்களிலும் , வணிக வளாகங்களிலும் , அலுவலகங்களிலும் கழிப்பிடத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்க ஆவண செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பதே நம் கோரிக்கை. இலவசக் கழிப்பிடத்தைச் சட்டமாக மாற்றும் வரை நம் கோரிக்கைகளைத் தொடர்ந்து வைப்போம். என் கோரிக்கைக்கு ஆதரவு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி உங்களிடம் ஆதரவு தாருங்கள் . நன்றி

https://www.facebook.com/YourBalajiRamasubbu/

 

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!