Youngsters NellaiTirunelveli, India
Dec 10, 2015
கோகோ கோலா குளிர்பான நிறுவனம், நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துவதால், வாரணாசியை சுற்றியுள்ள கிராமங்களில், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, இங்குள்ள வாரணாசி தொகுதியில் இருந்து தான், லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.இங்கு, மெதிகான்ச் என்ற இடத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த,பிரபல குளிர்பான நிறுவனமான, கோகோ கோலாவின் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனம், குளிர்பானம் தயாரிப்பதற்காக நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துகிறது. இதனால், இந்த பகுதியில் உள்ள, 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் தலைவர் அமித் ஸ்ரீவத்சவா கூறியதாவது: கடந்த, 1999ல், கோகோ கோலா தொழிற்சாலை இங்கு அமைக்கப்பட்டதில் இருந்து, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கு முன், எந்த பிரச்னையும் இல்லை. குளிர்பானம் தயாரிப்பதற்காக, நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது; அதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், உயர் அதிகாரிகளிடமும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்துள்ளனர். நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு, கோகோ கோலா நிறுவனத்துக்கு தடை விதிக்கும்படி அதில் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். Coca plant was running in varanasi.it was setup in 1999. Now due to sucking of huge amount of water,there was water scarcity in 18 villages around varanasi.Now people of 18 villages around varanasi were protesting against cola plant.
Support now
Sign this petition
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X