Right to protest peacefully in Chennai, India

Right to protest peacefully in Chennai, India
Why this petition matters
Over the last few weeks, the Commissioner of Police, Greater Chennai, Mr. A.K. Viswanathan, has been routinely denying permission for holding protests in Chennai on the issue of the Citizenship Amendment Act. While the rest of the country is able to exercise their constitutional right to dissent and protest, Chennai is left behind. The Chennai Police have made the process of organising and participating in protests extremely difficult, if not impossible.
Cases have been filed against over 8000 Chennai residents for carrying out peaceful protests, and anyone who speaks publicly at these protests or organises them has been named in FIRs.
By doing this, the police have essentially reduced the residents of Chennai to 2nd class citizens, taking away our dignity and rights. Further, the police have also detained several protesters, especially students, for many hours with the aim of intimidating them.
We should not have to negotiate with the police on our rights. It is particularly problematic that lawyers seeking to defend the rights of their clients and protesters are also threatened, named in FIRs and detained. This is a highly condemnable act. We further express our dismay at the callous actions of the police in maligning individual protesters and human rights defenders who are advocating for the rights of minorities, making them vulnerable to threats and attacks online and offline.
We call on the Chennai Police to:
- Consider the requests for protests on the merits of each application and refrain from applying a blanket ban on all protests on the Citizenship Amendment Act.
- Introduce a more transparent and efficient way of seeking permissions so citizens are not left at the system’s mercy.
- Drop all charges against peaceful protesters and their lawyers.
Sincerely,
Citizens Against CAA
கடந்த சில வாரங்களாக, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். நாட்டில் மற்ற இடங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எதிர்ப்புக்கு உள்ள உரிமையை செயல்படுத்த முடிகின்றபோது, சென்னை பின்தங்கி இருக்கிறது. சென்னை போலீசார், போராட்டங்களை ஏற்பாடு செய்வதையும், அவற்றில் பங்கு கொள்வதையும், சாத்தியமற்றது என்று சொல்லாவிட்டால், மிகக் கடினமான ஒரு செயலாக மாற்றியிருக்கின்றனர்.
அமைதியாக போராட்டங்கள் நடத்தியதற்காக, சென்னையில் வசிக்கும் 8000 நபர்கள் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த FIR-களில், போராட்டங்களில் பேசியவர்கள் மற்றும் அவற்றை ஏற்பாடு செய்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதன் மூலம், போலீசார் சென்னை வாசிகளை இரண்டாம்- தர குடிமக்களாக குறைத்து, எங்களது உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பறித்துள்ளனர். மேலும், போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட நிறைய நபர்களை, குறிப்பாக மாணவர்களை, பயமுறுத்தும் நோக்கத்துடன் பல மணி நேரம் தடுத்து வைத்திருக்கின்றனர்.
எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போலீஸாரிடம் வாதாட வேண்டியிருக்கக் கூடாது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக வாதாட வந்த வழக்கறிஞர்களையும் தடுத்து வைத்து, அச்சுறுத்தி, FIR- களில் பெயரிடுவதை கடுமையாக கண்டிக்கிறோம். மேலும், போராட்டத்தில் ஈடுபடும் தனி நபர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் பற்றி போலீசார் அவதூறாக பேசுவதையும் கண்டிக்கிறோம். இது, அவர்களை இணையத்திலும் மற்ற வகையிலும் ஆபத்திற்கு உள்ளாக்கும்.
சென்னை போலீசார்:
1.குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒரேயடியாக தடை செய்யாமல், போராட்டத்திற்காக அனுமதி கோருகின்ற ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தனியாக ஆய்வு செய்ய வேண்டும்.
2. குடிமக்கள் அரசு அமைப்புகளின் தயவை நம்பி இருக்காதவாறு, அனுமதி கோருவதற்கு மேலும் வெளிப்படையான ஒரு வழியை கொண்டு வர வேண்டும்.
3. அமைதியாக போராடிய மக்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் மேலிருக்கும் வழக்குகளை கைவிட வேண்டும்.
இப்படிக்கு,
CAA எதிர்க்கும் குடிமக்கள்