Petition updateNoone should be arrested for mourning
How is Thiru personally Like? One of his friend writes..

Maxwin rayenCuttack, India

30 May 2017
ஜுனில் ஸ்கூல் திறப்பார்கள், டுப்பிதான் திருவை அதிகம் மிஸ் பண்ணும், ஏனென்றால் அவர் வீட்டுக்கு உருப்படியா செஞ்ச வேலை டுப்பியை ஸ்கூலில் இருந்து அழைத்து வருவதுதான், பொண்ணு ஸ்கூல் பீஸ் கட்டமுடியாமல் நண்பர்களிடம் கடன் கேட்டிருந்ததை நேரில் கேட்டிருக்கிறேன்.
2009 க்கு பிறகு தனது அலுவலை வெகுவாக சுருக்கிக் கொண்டார், ஈழம் பெட்டி செய்தியாகி போலாகிக்கொண்டிடுந்த சமயம், ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் நகர தொடங்கியிருந்த வலி இப்போதும் அவருக்கு உண்டு, கையிலிருக்கும் பணத்தை எல்லாம் போட்டு 6 பிட் 8 பிட் போஸ்டர் ஓட்டுவோம், பெரிய கட்சிகளும் முதலாளித்துமும் முடக்கிப்போட்டிருந்த எம்மக்களுக்கு நாம் கத்தும் சத்தம் கேட்கவேண்டுமே வேறென்ன வழி, அது மட்டும்தான் எங்கள் குறி. மாற்று இயக்க தோழர்கள் சிலர் கோணலாக பார்த்தார்களாம்.
எதையும் பெரிதாக செய்ய வேண்டும், துணிச்சலாக செய்ய வேண்டும், கையில் என்ன இருக்கிறது என்பதெல்லாம் தெரியாது, எதிரி பிரம்மாண்டமானவன், அவனை எப்படி வீழ்த்த போகிறோம் என்பதுதான் கேள்வி..
போராடுவதற்கான ஒரு வாய்ப்பை கூட தவறவிடுவதில்லை, அரசியல் தலத்தில் கிடைக்கும் அத்தனை கூட்டத்திலும் அத்தனை வாய்ப்பிலும் தமிழர் அரசியலை ஈழ அரசியலை பதிவு செய்து கொண்டே இருக்கிறார், அலைந்து கொண்டே இருக்கிறார்,
ஈழ இனப்படுகொலைகளை உலக நாடுகளின் ஐநா மன்றத்தில் பதிவு செய்யும் வாய்ப்பில் செம்மர கடத்தல் மாஃபியா போட்டியில் ஆந்திர அரசு சுட்டுக் கொன்ற உழைக்கும் தமிழர்களுக்காகவும் பேசினார், தமிழகத்தில் நிகழும் சாத்திய ஆணவ படுகொலைகளையும் பார்ப்பன சாத்திய கட்டமைப்பையும் சேர்த்தே பதிவு செய்கிறார்.
உலகம் முழுவதும் தமிழர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை ஒன்றிணைக்கும் அரசியலை தொடுகிறார், துணிச்சலாக பேசுகிறார்.
போன வாரம் பெரியப்பா கேத வீட்டுக்கு வந்தவர், சாயங்காலம் திண்டுக்கலில் மூடப்படும் ரேஷன் கடைகள் புத்தக அறிமுக கூட்டம், புதிய இளைஞர்களின் புரிதலற்ற கேள்விக்கும் பொறுமையாக பதில் அளித்துவிட்டு நடுஇரவில் இறக்கிவிடப்படுவோம் என்று தெரிந்தும் கோவை பேருந்தில் ஏறிச்செல்கிறார், மறுநாள் கோவையில் நடக்கும் அய்யாக்கண்ணு அய்யாவின் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள.
ரொம்ப காரமா தன் அறிவையெல்லாம் கொட்டி ஒரு அரசியல் பதிவெழுதி லைக் வாங்கிட்டு திருப்தி பட்டுக் கொள்வதுமாதிரியான பிசினெஸ் இல்லை ஒரு அரசியல் இயக்கமாக வாழ்வதென்பது. அந்த உழைப்பை போட அருகதை இல்லை என்றால் அந்த உழைப்பை விமர்ச்சிப்பதில் சுயமான தயக்கம் இருக்க வேண்டும்.
இரக்கமே இல்லாமல் நடந்து கொள்வார், 2009 துரோகிகள் என்றைக்கும் துரோகிகள்தான் என்பார். நமக்கெல்லாம் எப்படியோ தெரியாது இன்னைக்கிவரைக்கும் இந்த துரோகிகள் அவரிடம் பரிவை பெற முடியாமைக்கு காரணம் உண்மையிலேயே ஈழ வலியை இப்பொதும் அவர் நெஞ்சில் சுமந்து இருக்கிறார்.
சில திமுக ஆதரவு பதிவர்களை பார்த்தேன் ஆதரவில் அவ்வளவு வன்மமான தொனி. அரசை எதிர்த்து போராடுவதென்றால் என்னவென்று தெரியும் அவர்களுக்கு, 5 வருடங்களுக்கு ஒருமுறை மக்களின் அறியாமைக்கு பிறக்கும் அயோக்கிய பதவிக்காக ஜொள்ளு ஊத்தும் கூட்டமது, மக்களின் அறிவோடு உரையாடும் இயக்கங்களின் அரசியலை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்துவிட்டு போகட்டும். திமுக தலைவரே கண்டித்து தனது ஜனநாயக உரையை காட்டிவிட்டார்.
இயக்கங்கள்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்பது அவர்களுக்கு புரியவில்லை, இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக நாளைக்கு ஆளுங்கட்சியாக வரும், அனால் ஒருநாளும் மக்களுக்காக போராடும் இயக்கங்கள் ஆளுங்கட்சி ஆகாது. இந்த அர்த்தம் எல்லாம் மக்களை ஓட்டுக்கு கணக்காக பார்க்கும் மடத்தனத்துக்கு ஒருநாளும் புரியாது.
சமீப காலங்களில் இந்திய அரசை. அதன் பார்ப்பனிய தன்மையை, பாஜக அரசை செயல்பாட்டுத்தளத்தில் இவ்வளவு கறாராக எனக்கு தெரிந்து யாரும் விமர்ச்சித்தது இல்லை.
மோடியின் டீமானிடைசேஷனில் இது இந்த துணைக்கண்டத்தில் சிறுவியாபாரிகள் உழைக்கும் மக்களின் ஷேடோ எகானாமியை அழிக்கும் என்றும் அம்பானிகளின் பல லட்சம் கோடி வரிஏய்ப்பை கண்டுகொள்ளாத பிஜேபி அரசின் சாதியை ஊடகங்களில் வலிமையாக பதிவு செய்கிறார், இன்றைக்கு உண்மையென்று விளங்குகிறது..
சல்லிக்கட்டு தடைக்கு பின்னல் இருக்கும் பார்ப்பனிய நலனை அரசியலை வலிமையாக பிரச்சாரம் செய்துகொண்டே இருந்ததன் விளைவு தை புரட்சியில் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை மக்கள் ஒதுக்கி தள்ளினார்கள்.
நெடுவாசலிலும், மீனவர் படுகொலைகள் என்று தமிழகத்தில் மீது நிகழும் அதனை ஒடுக்கு முறைகளிலும் பாஜகவின் பார்ப்பனிய இந்திய கட்டமைப்பின் தன்மைகளை தொடர்ந்து வலிமையாக பதிவு செய்து வருகிறது, அது வெகுமக்கள் கவனமும் பெறுகிறது. அதுதான் பாஜக கும்பலால் பொறுத்துக்க கொள்ளமுடியவில்லை,
இருக்கும் ஊடகங்களையெல்லாம் அரசையெல்லாம் மிரட்டி வளைத்து தமிழக மக்களிடம் கழகங்கள் இல்லா தமிழகம் கவலை இல்லா தமிழகம் என்று பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கும் தருணத்தில் இவர்கள் கீழடி தொடங்கி ரேஷன் கடைசிவரை தமிழக மக்களிடம் தங்களை அம்மணமாக்குவதை பார்ப்பன கும்பலால் பொறுத்துக்க கோலா முடியவில்லை.
பெரியாரை எங்குமே விட்டுக் கொடுக்காத தமிழ்த்தேசியத்தை திராவிடத்தின் செறிந்த பண்பாக பார்க்கும் பார்ப்பன காவிகளின் முன்னாள் இவையிரண்டையும் எங்குமே விட்டுக் கொடுக்காத தன்மைதான் காவிகளை இன்னும் உறுத்துகிறது,
திருமுருகன் காந்தி யுக புருஷன் கிடையாது, காலம்தான் திருமுருகன்களை உருவாக்குகிறது, 2009 தமிழினபடுகொலை தான் இங்கு லட்சக்கணக்கான திருமுருகன்களை உருவாக்கியிருக்கிறது, இப்போது இந்த காவி அரசு எல்லோரையும் ஒன்னு சேர்க்கிறது,
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X