திருமுருகன் காந்தியை விடுதலை செய்

0 have signed. Let’s get to 100!


தேர்தல் அரசியலில் இருந்து விலகி தமிழக மக்களுக்கு அரசியல் அறிவூட்டும் உன்னதமான பணியை மேற்கொண்டுவரும்

வளரும் இளம் அரசியல் தலைவர்

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி அப்பாவி மக்களின் மேல் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு படுகொலையை,

சர்வதேச சமூகம்,

மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில்

ஐநா மன்றத்தில் உரை நிகழ்த்தியதோடு

சர்வதேச மனித உரிமை செயல்பாட்டாளர்களை நேரிடையாக சந்தித்து

தமிழகத்தில் நடைபெற்று வரும் அரச பயங்கரவாதத்தை எடுத்துக்கூறும் அடுத்த கட்ட அரசியல் நகர்வை நிகழ்த்தி தாயகம் திரும்பினார்.

அவர் மீது இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் வந்தவுடன் கைது செய்யுமாறு ஏற்கனவே தமிழக காவல்துறையால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய போலீசாரால்  கைது செய்யப்பட்டார்.

அன்றைய தினம் இரவு ஒன்பதரை மணிக்கு தமிழக போலீசார் அவரை கையகப்படுத்திறஉணவு ஏதும் வழங்காமல், பல்வேறு இடங்களுக்கு அழைக்களித்தது சித்திரவதை செய்த   பிறகு நேற்று சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நிலை நிறுத்தப்பட்டார்.

மாண்புமிகு நீதிமன்றம் அவருக்கு அவரை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி பிணை வழங்கியது.

பிணை கிடைத்து வெளியே வந்த திருமுருகன் காந்தியை தமிழக போலீஸார் உடனடியாக வேறொரு வழக்கில் கைது செய்துள்ளனர்.

  ஒரு மக்களாட்சி ஜனநாயகத்தில் இவ்வாறான உரிமைகள் மறுக்கப்பட்டு செயல்பாட்டாளர்கள் சித்திரவதை செய்யப்படுவது நேரடியாக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு சமமானதாகும்.

இதற்குமுன்பு அவர் மீது போடப்பட்ட அனைத்த வழக்குகளையும், அவர் சட்டப்படியாக எதிர்கொண்டுவரும் வேலையிலும்,

நீதிமன்றம் பிணை வழங்கி உள்ள நிலையிலும்,

இதற்கு மேலும் அவரை பொய் வழக்குகளின் மூலம் துன்புறுத்துவத்தி மேற்படி இயக்கத்தின் செயல்பாடுகளைத் தடுப்பது அரசியல் பின்னணி கொண்டதல்லாமல் வேறு காரணங்கள் இருக்க முடியாது.

எனவே மேற்படி தமிழ்நாடு காவல்துறை உடனடியாக பொய் வழக்குகளை ரத்து செய்து  திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.