Justice For Dalits Of Vengaivayal Village | வேங்கைவயல் தலித்துகளுக்கு நீதி
The Issue
14.01.2023
Our policymakers based in urban centres may be singing paeans about having eradicated caste-based discrimination in the country, but the everyday reality of Dalits in rural India shows that this menace still plagues our society.
In Vengaivayal, a small village in Pudukottai District of Tamil Nadu, upper-caste residents refused to share drinking water from their tank with Dalits. So with the help of the village authorities, a separate water tank was built to supply drinking water to Dalit residents.
This is how rural India navigates caste-based discrimination – not by correcting the bigoted attitudes of upper-caste people, but by acceding to their demands and pushing Dalits further to the fringe.
But in December last year, when a few Dalit youths fell sick, doctors suspected water contamination as the cause for their illness. Weeks later, when the water tank was opened, human excrement was found in the drinking water.
Dalit residents have alleged this to be a retaliation from upper-caste Hindus of the village, after the former had filed a complaint against the practice of having separate glasses for Dalits and upper-caste Hindus at tea stalls in the village.
As per several news reports and eyewitnesses, during the investigation into the matter of contamination of drinking water, the police officials have only been interrogating and harassing Dalit residents and haven’t made a single arrest in the case.
As writers and artists who vehemently condemn all inhumane acts and fight for self-respect and decent livelihood, we are in complete solidarity with the victims of Vengaivasal.
We humbly request our CM to visit the village. Your promising words to the victims will give them moral and emotional support. We would also welcome ministers from Pudukkottai to visit the village and take special measures under your supervision to immediately put an end to this prevailing caste based discrimination.
பெறுநர்,
திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.
வணக்கத்திற்குரிய அய்யா,
தமிழர் திருநாளாம் பொங்கலை நாம் உற்றார் உறவினரோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வேங்கைவயல் தமிழர்களாகிய தலித்துகள் மலம் கரைக்கப்பட்ட தண்ணீரில் எப்படி பொங்கல் வைப்பதென மருகிக் கிடக்கும் அவலத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அந்தச் சிற்றூரில் அவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த வேறுசில தீண்டாமைக்கொடுமைகள் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும், அவர்களது குடிநீரில் மலத்தைக் கரைத்தக் கொடூரர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அங்கிருந்து வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன.
குற்றவாளிகளைத் தேடி கைது செய்வதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையின் தனிப்படை, வன்கொடுமைக்காளான தலித்துகளையே குற்றவாளிகளாக்கும் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது. தலித்துகளால் சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் என சுட்டப்படுவோரை சுதந்திரமாக நடமாட அனுமதித்துவிட்டு விசாரணை என்கிற பெயரில் தலித்துகளை வரவழைத்து மிரட்டியும் அடித்துத் துன்புறுத்தியும் பொய்யான வாக்குமூலங்களைப் பெறுவதற்கு தனிப்படை முனைப்பு காட்டிவருகிறது. அவர்களது குடிநீர்த் தொட்டியில் அவர்களே மலத்தைக் கரைத்துவிட்டு அதே தண்ணீரை குடித்துக் கொண்டிருப்பதற்கு மனம் ஒம்புமா என்கிற குறைந்தபட்ச தர்க்கத்தின்படியாகக்கூட யோசிக்காமல் இப்படி தலித்துகள் மீதே பழிசுமத்துவதானது மறுபடியும் மலம் கரைப்பதற்கு ஈடான குற்றமாகும். காவல்துறை தனிப்படையின் இந்த அட்டூழியத்தை பாதிக்கப்பட்ட மக்கள் துணிச்சலுடன் ஊடகங்கள் வழியே வெளிக்கொணர்ந்துள்ளனர்.
மனிதமாண்புகளுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்க்கிற எழுத்தாளர்களும் கலைஞர்களுமாகிய நாங்கள் இவ்வேளையில் தன்மதிப்புக்காகவும் கண்ணியமான வாழ்வுக்காகவும் போராடிவருகிற வேங்கைவயல் தலித்துகளுக்கு எமது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கிறோம்.
நம்பகமற்றதாகவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் விருப்புறுதியற்றதாகவும் உள்ள தனிப்படையின் செயல்பாடானது தலித் விரோதமானது மட்டுமன்றி வன்கொடுமைகளை இழைப்பவர்களுக்கு ஆதரவானதாகவும் மேலும் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதற்கு ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. எனவே இப்பிரச்னையை சிபிசிஐடி போன்ற வேறு புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பிய கோரிக்கையினை ஏற்று விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளதை வரவேற்கிறோம். விசாரணையின் மீது தங்களது நேரடி கண்காணிப்பு தேவை.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளில் பாதிக்கப்பட்ட தலித்துகளை பணியவைக்க எதிர் வழக்கு தொடுக்கும் கடந்த ஆட்சிக்காலங்களின் அணுகுமுறையை தங்களது ஆட்சியிலும் காவல்துறையினர் தொடர்வதற்கு தாங்கள் அனுமதிக்கக்கூடாதென வலியுறுத்துகிறோம்.
தாங்கள் வேங்கைவயல் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பது அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிப்பதாயிருக்கும். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரண்டு அமைச்சர்களும் வேங்கைவயலில் முகாமிட்டு அப்பகுதியை தீண்டாமைக் கொடுமைகளற்ற பகுதியாக்குவதற்கான பணிகளில் ஈடுபடுமாறு தாங்கள் பணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை குடிமக்கள் தமது சொந்த வாழ்வில் உணர்வதற்கு எதிராக சாதிய வன்மத்துடன் நிகழ்த்தப்படும் குற்றங்களை ஒடுக்குவதற்கு அரசு நிர்வாகமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து செயல்படுவதை தாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
சாதிய வன்கொடுமையில் ஈடுபடுவோரும் அவர்களுக்கு உடந்தையானோரும் அரசியல் சாசனத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதாக கருதப்பட்டு அவர்களுக்கான நிதியுதவி, சேவைகள், இட ஒதுக்கீடு முதலானவற்றை அரசு திரும்பப் பெறுவது பற்றி பரிசீலிக்க வேண்டும். சாதிய மனோபாவத்திலிருந்து மக்களை விடுவிப்பதற்கான செயல்திட்டத்தை மாநில அரசு உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
எஸ்.வி.இராஜதுரை
வ.கீதா
ச.பாலமுருகன்
அழகிய பெரியவன்
சுகிர்தராணி
யாழன் ஆதி
ஆதவன் தீட்சண்யா
6,221

The Decision Makers
Petition Updates
Share this petition
Petition created on 13 January 2023