Say No to Storm Water Drains on ECR

0 have signed. Let’s get to 1,000!


1 . The colonies are on the beach side of ECR where the soil is sandy .

2.Sandy soil is porous and the water drains freely into the soil.

3.The sandy strip between the edge of road and the property boundary is a natural storm water drain recharging groundwater. 

4. This construction of SWD was unilaterally started by GCC with no consultations with residents.

5 The plans for SWD are regular concrete box drains seen all over Chennai City with recharge structures at regular intervals

6. There is no German Technology in the proposed SWD

7 .The proposed project has no benefits to residents & will cause hardship & inconvenience & environmental degradation

8. Monies planned for these projects could be better used for other needy projects in these times of financial constraint.

1.      எங்கள் குடியிருப்பு நிலம்,  கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து கடலை நோக்கி இயற்கையாகவே கீழ்நோக்கிசாயும் தன்மை கொண்டது.

2.      நிலம், மணல் பரப்பு கொண்டது, ஆதலால் மழைநீர் தானாகவே நிலத்தடியில் சென்று நிலத்தடி நீர் மட்டத்தை நிரப்பும். 2004ம் ஆண்டு வந்த சுனாமியின்போதும் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினபோதும் எங்கள் குடியிருப்பில் எவ்வித நீர்தேக்கமும் ஏற்படவில்லை.

3.      அத்துடன்   இங்குள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு முறை அமைக்கப்பட்டு மழைநீர் , நிலத்தடி நீர்மட்டத்தை மறுசுழற்ச்சி செய்ய முழுமையாக பயன்படுகிறது. மழை நீரை அதன்போக்கில் நிலத்தடியில் சேர்வதில் தடுக்கும் வண்ணம், அதை கடலில் கொண்டு போய்சேர்ப்பது இயற்க்கைக்கு எதிரானது ஆகும்.

4. எங்களுக்கு இன்னமும் நிலத்தை பாதாள சாக்கடை வசதி அமைத்துக்கொடுக்காத நிலையில், இங்கிருக்கும் வீடுகள் கழிவுநீர் தொட்டியை சார்ந்துள்ளனர். ஆகையால்  ஊர்மக்கள் சிலபேர் உரிய அனுமதியின்றி கழிவுநீர் தொட்டியை மழைநீர் வடிகாலுடன் இணைத்து, அதனால் சுகாதாரம் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிரோம். திட கழிவுகள் கூட அந்த கால்வாய்களில் கொட்டப்பட்டு காலப்போக்கில், அடைப்புகள் ஏற்பட்டு, நீர் போக்கினை தடைசெய்யும்.

5.      நாங்கள் துறை சார்ந்த வல்லுநர்களை ஆலோசித்து அவர்களது கருத்து இத்தகைய மழைநீர் வடிகால் அமைப்புக்கு  எதிராக உள்ளது என அறிந்திருக்கும் நிலையில், வெளிப்படைத்தன்மை கருத்தில் கொண்டும், தங்கள் நிலைப்பாடுகளை சரிவர நாங்கள் புரிந்துகொள்ளவும், பெருநகர சென்னை மாநகராட்சியுடனும், KFW நியமித்த ஆலோசகருடனும் எங்களுக்கு ஓர் சந்திப்பை ஏற்படுத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6.      கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிற சங்கங்களும் இந்த திடடத்தை எதிர்ப்பதாக நாங்கள் அறியவந்துள்ளபடியால், அனைவருடனும் ஒரு சந்திப்பை நிகழ்த்தி, இந்த மழைநீர் வடிகால் திட்டத்தை பற்றி அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது நியாயமானதாக நாங்கள் கருதுகிறோம்.

7.      பெருநகர செ ன்னை குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் வாரியம், குடிநீர் வழங்குவதற்கும் , பாதாள சாக்கடை அமைத்தது தருவதற்கும் திட்டங்களை தயார்நிலையில் வைத்துள்ளது. அதனால் அவர்களுடன் ஒருங்கிணைந்து  அவர்கள் குடிநீர் வழங்குதல் மற்றும் பாதாள சாக்கடை அமைத்தல் பொருட்டு திட்டமிடப்படட ஏற்பாடுகள் மற்றும் கால வரம்புகள் பற்றி அறிந்துகொள்ளுதலும்  ஏற்புடையதாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இங்கு குடியிருக்கும் நாங்கள் எங்கள் குடியிருப்பில் மழை நீரி வடிகால் ஏற்படுத்துவதை கடுமையாக எதிர்ப்பதோடு, இந்த திடடத்திற்கான நிதி ஆதாரங்களை பாதாள சாக்கடை திடடம்  மற்றும் பாதுகாக்கப்படட குழாய் முறை குடிநீர் வழங்குதல் ஆகிய அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிரோம் .

 

நன்றியுடன்