Education

12

Let’s get to 25 signatures!
Petitions with 1,000+ supporters are 5x more likely to win!

The Issue

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு...

வணக்கம் 🙏.

தற்போது தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக்களில் மழலையர் வகுப்பு முதல் உயர் வகுப்பு  வரை கல்விக்கட்டணம் என்பது, ஒவ்வொரு வருடமும் லட்சங்களில் செலுத்த வேண்டியுள்ளது..

இந்நிலையில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெரும் பெரும்பாலான பள்ளிகளில், ஒன்றிரண்டு வகுப்புகளைத் தவிர அனைத்து வகுப்புகளும் தமிழ் வழிக் கல்வியாகவே உள்ளது.

 இதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பெரும்பாலான பெற்றோர்கள் கடன் வாங்கி தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு பின்னர் பணத்திற்காக மிகவும் அல்லல் படுகின்றனர்.


இந்நிலை மாற வேண்டுமானால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்...

இதனால் தனியார் பள்ளிகளில் அதிக பணம் செலுத்த இயலாதவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் ஆங்கில வழி கல்வியை பெறமுடியும்.

இதனால் பிள்ளைகளின் கல்வி அறிவு மேம்படுவதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் பெற்றோர்களுக்கும் பொருளாதார சுமையும் குறையக் கூடும்..

இதனால், அரசு பள்ளி என்பது, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள் மற்றும்  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மட்டுமே அதிகம் பயிலும் பள்ளியாக இலாமல் தனியார் பள்ளிகள் போல் அனைத்து உயர் வகுப்பினரும் பயிலும் சமத்துவ பயிலரங்கமாக மாறும்.. 


வருகின்ற புதிய அரசு அதற்கான கட்டமைப்பை வரும் கல்வியாண்டிலேயே தொடங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏


இங்ஙனம் 
அவெரா....✍️

Petition Updates

Share this petition

Petition created on 7 April 2026