சுற்றுச்சூழல், காலநிலை பேரழிவுகளை எதிர்நோக்கும் மும்பை. இதன் காரணம் தீபாவளி இல்லை
The Issue
மும்பை, இந்தியர்களின் கனவு நகரம். செல்வச்செழிப்பில் ஆசிர்வதிக்கப்பட்டிருந்த போதும் மற்றொரு விதத்தில் இந்நகரின் நிலை கவலைக்குறியதாக இருக்கிறது, நெருக்கடி மிகுந்த நிலையில் இந்நகர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா மற்றும் ஆரே காடு மட்டுமே. அரபிக் கடலின் கரையில் இருக்கும் இந்த வளமான பசிய பாலைவனச்சோலைகள் சுற்றுச்சூழலை காப்பது, பெருவெள்ளத்தை தடுப்பது மட்டுமல்லாமல் வெப்பநிலையை குறைக்கவும் உதவுகின்றன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மும்பைக்கு கொண்டுவரப்படவுள்ள பல திட்டங்களால் இக்காட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதில் முதலாவதாக இந்த பசுமையான சுவாசம் வணிகமயமாக்கலுக்கு பலியாகப்போகிறது. ஆம் இக்காட்டின் ஒரு பகுதி மும்பை மெட்ரோ 3 திட்டத்துக்கான கார் நிறுத்தும் பகுதியாக மாறப்போகிறது. ஜப்பான் நிறுவனமான, ஜப்பான் இண்டர்நேஷனல் கார்பரேஷன் ஏஜென்சி இத்திட்டத்துக்கு 57% நிதியளிக்கிறது. இது சுமார் 2,036 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இவ்வளவு செலவு செய்து, பசுமை பகுதியை கொத்தி குதறி செய்யப்படும் திட்டம், மெட்ரோ ரயில் நிலையத்தின் கார் நிறுத்துமிடம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.
JICA
வாசகர்களே, காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், இயற்கை பேரழிவுகள் என உலகம் போராடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு வாகன நிறுத்தும் இடத்துக்காக ஒரு மாநகரின் நுரையீரல் போன்ற பசுமைப் பகுதியை அழிப்பது பொறுப்பற்ற செயல்.
வாகன நிறுத்துமிடத்துக்காக 3500 மரங்கள் வெட்டப்படுவது குறித்து அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுற்றுச்சூழலை அழிக்காமல் இத்திட்டங்களை செயல்படுத்த பல சாத்தியமான வாய்ப்புகள் உள்ளது குறித்து ஆய்வுகள் செய்யப்படுள்ளன.
இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனங்களான NEERI மற்றும் IIT ஆகியவற்றின் வல்லுநர்கள், வேறு 7 மாற்று யோசனைகளை பரிந்துரைத்துள்ளனர். ஆரே காட்டில் வாகன கட்டப்பட்டால், திறந்த வெளிகள் அழியும் நிலை, வெள்ளப்பெருக்கு, வனவிலங்குகளின் இழப்பு உள்ளிட்ட பல எதிர்மறை விளைவுகளை மும்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அவர்கள் தெளிவாக எச்சரித்துள்ளனர்.
அரசாங்க பதிவுகளின் படி ஆரே, சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் ஒருங்கிணைந்த வனப்பகுதியாகும். இதனால் வன சட்டத்தின்படி இப்பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்டுள்ளது, இங்கு வசிக்கும் 9 சிறுத்தைகளின் தாயகமாகும். மேலும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வளமான பல்லுயிர் தன்மையைக் கொண்டுள்ளது. இப்பகுதியின் பூர்வீக குடிகளான ஆதிவாசிகளின் வசிப்பிடமாக இருந்துவருகிறது. ஆரே பகுதியில் 27 பழங்குடி குக்கிராமங்களில் இந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நகர்புற மக்கள் இயற்கையை மிகச் சிறந்த முறையில் அனுபவிக்க இது ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
வளர்ச்சி என்றாலே பழங்குடி மக்களின் வாழ்வாதரத்திலும், வாழிடத்திலும் கைவைப்பதே தற்போதைய இந்தியாவின் நிலையாக இருந்து வருகிறது
சேவ் ஆரே பிரச்சார இயக்கம் வாகன நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இடமாற்றம் மெட்ரோ 3 சீரமைப்பை எந்த வகையிலும் பாதிக்காது. அனைத்து தரப்பு மக்களும், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள், பிரபலங்கள் இந்த பிரச்சினைக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது குறித்து அனைத்தும் அறிந்திருந்தும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், மாநில அரசு, ஆரே பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் முனைப்பில் இருக்கிறது.
இத்திட்டத்தை ஆதரிப்பதற்காக, மும்பை மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ஜப்பான் இண்டர்நேஷ்னல் கார்பரேஷன் ஏஜென்சி (JICA) நிறுவனத்துக்கு தவறான தகவல்களை அளித்துள்ளனர். இத்திட்டம் மும்பையின் மாநகர பகுதிக்குள் அமைவதாகவும், இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் வனப்பகுதியோ, வனவிலங்குகள் வாழும் பகுதியோ எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ஆரே பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும் 76 வகையான பறவைகள், 80 வகையான பட்டாம்பூச்சிகள், 16 பாலூட்டிகளின் இனங்கள், 38 வகையான ஊர்வன வகைகள், 9 சிறுத்தைகள் மற்றும் 5 லட்சம் மரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்லுயிர் மண்டலமாகும்.
இந்த மனுவை நீங்கள் ஆதரிப்பதன் மூலம் இத்திட்டத்துக்கு வழங்கப்படும் நிதியை மறு ஆய்வு செய்ய JICA நிறுவத்திடம் கோரிக்கை வைக்க முடியும். JICA கொண்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக கருத்தின்படி இப்பிரச்சினை குறித்து பதிலளிக்க வேண்டும். இதன் மூலம் மும்பை நகரம் ஒரு மெட்ரோவை பெறுவது மட்டுமல்லாமல், ஒரு மிகப் பெரிய திறந்த வெளி மற்றும் பசுமையான வனப்பகுதியை இழக்காமல் காப்பாற்றப்படும். அந்நிறுவனத்தின் கொள்கைகளை கருத்தில் கொண்டு , ஆரேயில் உள்ள நிலங்கள் மேலும் பல பெரிய திட்டங்களுக்கு பலியிடப்படுவைதை முடிவுக்கு கொண்டு வர JICA உதவும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்

Petition Closed

The Decision Makers

Petition Updates
Share this petition
Petition created on 2 July 2019