Petition updateAICTE should withdraw 1:20 Faculty Student Ratio (FSR)

Harassments @ Pallavan College of Engineering, Kanchipuram

AIPCEU
25 Jan 2018
பல்லவன் பொறியியல் கல்லூரியானது ஜூன் 2017 மாதத்தில் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்த அனுபவம் மிக்க பேராசிரியர்கள் பலரை பனி நீக்கம் செய்து, அதே பணிகளில் குறைந்த ஊதியத்தில் புதிய பேராசிரியர்களை பணியமர்த்தி கொண்டது. அவ்வாறு பனி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற ஊழியருக்கும் நான்கு மாத சம்பளம் (April - July 2017) கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது. இன்று வரை அந்த சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த கல்லூரியில் ஊழியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணத்தை வருமான வரி அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு Form:16 கடந்த மூன்று வருடங்களாக கொடுக்கப்படவில்லை (2014-2017). இதை வருங்கால வாய்ப்பு நிதி அலுவலகம், வேளூர் உறுதி செய்துள்ளது. மேலும் இது குறித்து புகார்களை பெற்று கொண்ட PF அலுவலகம், வேலூர் PF துணை ஆணையர் (Asst Commissioner) முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி பல்லவன் கல்லூரி தாளாளருக்கு (Principal) நோட்டீஸ் வழங்கி உள்ளது.