stop the pepsi unit in suriyur,tamilnadu

The Issue

வீட்டில் இருந்தபடியே போராட அழைக்கின்றோம்-- முகநூல் மற்றும் whatsapp வழியாக பட்டிதொட்டியெங்கும் இப்பிரச்சினையை எடுத்து சென்ற அனைவருக்கும் நன்றி.
ஆனால் இது தொடக்கப்புள்ளிதான்.
நமது முதல் போராட்டம்.
தமிழக முதலமைச்சருக்கு தந்தி (Online petition) மற்றும் பதிவு அஞ்சல்(Register Post) அனுப்பும் போராட்டம். .
ஆம்,
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சூரியூரில் அனுமதியில்லாமல் இயங்கிவரும் பெப்சி கம்பெனிக்கு எதிராக போராடுவது சாத்தியமில்லை.
அதனால்,
வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே நம் போராட்டத்தை தொடங்குவோம். ஆம், இந்தியாவில் உள்ள சுமார் குறைந்தது 1 கோடி மக்களாவது இப்போராட்டத்தின் மூலம் அனுப்பும் புகாரால், தமிழக அரசுக்கு இப்பிரச்னையை கொண்டுசெல்ல முடியும்.
கீழே உள்ள புகார் மனுவை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்புங்கள். அனுப்புனர்: உங்கள் முகவரி பெறுநர் :
தனி அலுவலர்
முதலமைச்சர் தனிப்பிரிவு
தலைமை செயலகம்
சென்னை – 600 009
தொலைப்பேசி: 044- 2567 1764 மதிப்புக்குரிய ஐயா திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், சூரியூர் ஊராட்சி, பெரிய சூரியூர் கிராமத்தில் சர்வே எண் 469/1A2 மற்றும் 469/1B2 நிலங்களில் பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது.
இந்நிறுவனம் சுமார் 1,00,000 சதுர அடி வரை தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஆனால் 2000 சதுர அடிக்கு மேல் கட்டும் வணிக கட்டிடங்களுக்கு தேவையான கட்டிட வரைபட அனுமதி மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி ஏதும் நகர் ஊரமைப்பு துறையிடம்(DTCP) இன்றுவரை பெறப்படவில்லை. மேலும், இந்நிறுவனம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 160ன் படி ஒரு தொழிற்சாலை தொடங்குவதுற்கு, ஊராட்சி ஒன்றிய கவுன்சில் அனுமதி மற்றும் இயந்திரங்கள், தளவாடங்கள் நிறுவுவதற்கு அனுமதி ஏதும் பெறப்படவில்லை. அதனை முன்னிட்டு திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மான எண். 194 நாள்: 06.05.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட நிறுவனத்தை தடை செய்ய சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடமிருந்து L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தின் உரிமம் புதுபிப்பதற்கான காலக்கெடு 31.03.2014 அன்றுடன் முடிந்துவிட்டது. இத்துறையிடமிருந்து இன்றுவரை உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதி பெறாமல் இயங்கிவரும் பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தை நிரந்தரமாக மூடி, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்ட புகார் மனுவை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உடனடியாக அனுப்பிவையுங்கள். ---முதலமைச்சர் தனிப்பிரிவு--- இணையதளம்(website)
http://www.cmcell.tn.gov.in/register.php
என்ற இணையதளத்தை login செய்து புகார் அனுப்பவும் (அல்லது) ---முதலமைச்சர் தனிப்பிரிவு மின்னஞ்சல்(E.mail)--- cmcell@tn.gov.in (அல்லது) ---முதலமைச்சர் தனிப்பிரிவு Fax Number--- 044-25676929 (அல்லது) ---பதிவு அஞ்சல்(Register Post) மூலம் அனுப்ப விரும்புவோர்--- தனி அலுவலர்
முதலமைச்சர் தனிப்பிரிவு
தலைமை செயலகம்
சென்னை – 600 009
தொலைப்பேசி: 044- 2567 1764 தோழர்களே, நண்பர்களே
நாம் ஒவ்வொருவரும் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், அநீதிகளையும், உரிமை மீறல்களையும் பார்க்கும்போது ஆதங்கபடுகிறோம், வீதியில் இறங்கி தட்டிகேட்கவேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் குடும்ப சூழல் காரணமாகவும், மற்ற சில காரணங்களாலும் அமைதியாய் சென்றுவிடுகிறோம். சூரியூரில் உள்ள பிரச்சனைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள நாம் ஆதரவு தெரிவிக்கமுடியுமே தவிர, நேரடியாக உண்ணாவிரதம், ஆர்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில்கலந்துகொள்வது கடினம். அதனால் தான் முதல்முறையாக நம் போராட்ட வடிவத்தை மாற்றி, மாற்றுவழி போராட்டத்தை தொடங்க இருக்கிறோம். நாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே போராடபோகிறோம். இதெல்லாம் ஒரு போராட்டமா என்று சாதரணமாக நினைக்கவேண்டாம். என்னென்றால் நான் ஒருவன் மட்டும் முதலைமைச்சருக்கு தந்தி அனுப்பினால் அது புகார். ஆனால், மாணவர்கள், இளைஞர்கள், வேளையில் இருப்போர், வீட்டில் இருப்போர், முதியோர் என 1 கோடி பேர் தந்தி அனுப்பினால் அது ஒரு மாபெரும் போராட்டம். இதை போராட்டமாக மாற்றுவது உங்கள் கையில்.... “ இனி ஒரு விதி செய்வோம்” ஆதாரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கரம் கொடுங்கள் மாற்றி அமைப்போம் --கரம் கொடுக்க தொடர்புகொள்ளுங்கள்--
வினோத்ராஜ் சேஷன்
தண்ணீர் இயக்கம்
9500189319 www.thanneer.orgivfvinothraj@gmail.comhttps://facebook.com/thanneer3https://facebook.com/vinothraj.seshan

இதை அனைவரும் முகநூல் (Facebook) மற்றும் Whatsapp-ல் பகிருங்கள்(Share). ஏனெனில் பத்திரிக்கை, ஊடகங்களை விட சமூக வலைதளங்களுக்கு சக்தியும் அதிகம், பொறுப்புகளும் அதிகம்.

This petition had 415 supporters

The Decision Makers

Chief Minister of Tamilnadu
Chief Minister of Tamilnadu
தனி அலுவலர் முதலமைச்சர் தனிப்பிரிவு தலைமை செயலகம் சென்னை – 600 009

Petition Updates

Share this petition

Petition created on 26 October 2014