SAVE CALVE COLLEGE PUDUCHERRY

0 have signed. Let’s get to 500!


பாரம்பரியமிக்க கலவை கல்லூரியை பாதுகாக்க கோரி.... 

புதுச்சேரி நீண்டகாலமாக பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்து. பிரெஞ்ச்-இந்தியா ஆட்சிகாலத்தில் நடத்தப்பட்ட பள்ளிகளில்புதுச்சேரி மாணவர்களுக்கு பள்ளியில் பாகுபாடு கட்டப்பட்ட நிலையில், 1877ஆம் ஆண்டு வேலூரை பூர்வீகமாக கொண்ட கலவைசுப்பராயலு செட்டியார் என்பவரால்கட்டப்பட்ட பள்ளி, கலவை கல்லூரிபள்ளி ஆகும். அக்காலத்திலேயேமதிய உணவு ஏழை எளியமாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பள்ளியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் அமைச்சர்களையும் படைத்தபள்ளியாகும்.

 

கலவைக் கல்லூரி மாணவர்கள்பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராக 1927-ல்கிளர்ச்சி செய்தனர். பிரெஞ்சு-இந்தியவிடுதலைப் போராட்டத்திற்கு நடந்தமுதல் மாணவர் போராட்டம்இங்கிருந்துதான் துவங்கப்பட்டது, பின்னர் அது புதுச்சேரி விடுதலைக்குவித்திட்டது. அதேபோல் அதே தெருவில் உள்ள வ.ஊ.சி பெயரிலான பள்ளி மாணவர்களின் பங்கும் விடுதலை போராட்டத்தில் ஏராளம்.தமிழ்நாடு-புதுச்சேரி இணைப்பிற்குஎதிர்ப்பு தெரிவித்து நடந்தபோராட்டத்தில் கலவைகல்லூரி மாணவர்கள் பங்கு மிகப்பெரியது. தொடர்ந்து நடத்தப்பட்டபோராட்டத்தின் விளைவாக மக்களிடம்மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது.

 

விடுதலை போராட்டத்திலும், மாநில உரிமை காக்கும் போராட்டத்திலும் இப்பள்ளிகளின் மாணவர்கள் பங்கு ஏராளம். தற்பொழுது மிஷன் வீதி கலவை பள்ளி முடப்பட்டுள்ள நிலையில் முன்னால் மாணவர்களும், சமூக ஆர்வளர்களும் இப்பள்ளியை திறக்க வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

 

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பள்ளிகள் கலவைக்கல்லூரி பள்ளி மற்றும் வ.ஊ.சி பள்ளிகளை பழமைமாறாமல் புதுப்பித்து, மீண்டும் இயக்க வேண்டும். கலவை கல்லூரி பள்ளியில் +1 சேர்க்கை என்பது இந்த கல்வி ஆண்டில் நிறுத்தப்பட்டுள்ளது, எனவே வரும் கல்வி ஆண்டில் மீண்டும் சேர்க்கை நடத்த வேண்டும். எனவே புதுச்சேரி அரசு எதிர்வரும் பட்ஜெட்யில் இப்பள்ளிகளை புதுப்பிக்க தேவையான நிதியினை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.