No Mains for TNPSC Group-4 Exam

0 have signed. Let’s get to 7,500!


GROUP-4 தேர்வு இளநிலை உதவியாளர் பதவிகள், போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்  தமிழக அரசின் கடைநிலைப் பதவிகளுக்கான தேர்வு.

GROUP-4 தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள். ஒரு சில பள்ளிகளைத் தவிர பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் குறைவு. சிலர் தனித்தேர்வர்கள்.

ஏழை தேர்வர்கள், குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், ஆங்கில / தமிழ் மொழி எழுத்து அறிவுத் திறன் போதுமான அளவு இல்லாதவர்கள், ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப் படுபவர்கள், கையெழுத்து மோசமாக எழுதுபவர்கள் இவர்களின் விடிவெள்ளி GROUP-4. 

தேர்வர்களைத் தேர்வு செய்த பின்னர்  தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள்களுக்கு பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் இன்னும் கூடுதலாக தேவைப்படும் பயிற்சி அளிக்கலாம்.

GROUP-4 க்கு எழுத்துத் தேர்வு (Descriptive Type) கண்டிப்பாகத் தேவையில்லை. இது GROUP-1 போன்று இன்னும் சில முறைகேடுகளுக்கு வழி வகுக்கலாம். GROUP-1-2 தேர்வுக்கு முதன்மைத் தேர்வு இருக்கிறது. இது பட்டபடிப்புத் தரம், எனவே இதற்க்கு இருக்கலாம்.

எனவே எப்போதும் போல முதல் நிலை கொள்குறித் தேர்வை மட்டும் வைத்து தரமான கேள்விகளுடன் தேர்வர்களை தேர்வு செய்ய போட்டித் தேர்வர்கள் சார்பாக பணிவுடன் அரசை கேட்டுக்கொள்கிறோம்.