தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்காதீர். Say No to TASMAC in TamilNadu.

0 have signed. Let’s get to 5,000!


தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாக அதிகரித்துவரும் ஆபத்தான சூழலில், மே 7அன்று தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருப்பது கடும் அதிர்ச்சியையும்,
வருத்தத்தையும் அளிக்கிறது.

கடந்த சில வாரங்களாக மதுக்கடைகள் இல்லாமல் பல லட்சம் குடும்பங்கள், வாழ்வாதாரத்தை இழந்து உணவு,மருந்துக்கே போராட வேண்டிய சூழலிலும் சிறிது நிம்மதியோடு இருந்தன. மதுக்கடைகள் இல்லாததால் தமிழகத்திற்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை.

ஆனால் அரசு மக்களை குறிப்பாக பெண்களைப் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாமல் , கொரொனா தொற்று பரவுவதைப் பற்றிக்கூடக் கவலைப் படாமல் மதுக்கடைகளைத் திறப்பதன் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களின் நிம்மதியில் நெருப்பள்ளிக் கொட்டியிருக்கிறது.

ஏற்கனவே அடிப்படைத் தேவைகளுக்கே வழி இல்லாமல்,கொரொனா தொற்று ஊரடங்கால் செய்வதறியாமல் வறுமையோடு போராடிக்கொண்டிருக்கும் பெண்கள்,இனி மதுவால் ஏற்படும் பணப்பற்றாக்குறை,குடும்ப வன்முறை,நிம்மதியிழப்பு என்று அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

மேலும் தமிழகத்தில் ஏறக்குறைய ஒரு கோடி பேர் குடிப்பழக்கம் உள்ளவர்கள்,நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் என்றும் தரவுகள் சொல்கின்றன. நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களை கொரொனா கடுமையாக பாதிப்பதை உலக சுகாதார நிறுவனம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரொனா தொற்று விரைவில் பரவவும் வாய்ப்புள்ளது.

தெரிந்தே கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு அரசு விளையாடுவது அரசின் அக்கறையின்மையை,அலட்சியத்தைக் காட்டுகிறது.

ஒரு பொறுப்புள்ள அரசு மக்கள் நலனையே முன்னுரிமையாகக் கொள்ளவேண்டும். பெண்களின் வேதனை,கண்ணீர், குடிப் பழக்கம் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு , தமிழகத்தில் கொரொனா பரவல் என்று எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு தமிழக அரசு மதுக் கடைகள் திறக்கும் முடிவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இந்த மனு மூலம் வலியுறுத்துகிறேன்.

இந்த மனுவை ஆதரிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்

Please do support and sign the petition.

--

செ.ஜோதிமணி,
நாடாளுமன்ற உறுப்பினர்
கரூர்