லயோலா வசமுள்ள கோயில் நில மீட்பு

லயோலா வசமுள்ள கோயில் நில மீட்பு

0 have signed. Let’s get to 500!
At 500 signatures, this petition is more likely to be featured in recommendations!
Tamil Nadu Munnetra Kazhagam started this petition to The Principal, Loyola College, Chennai.

சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு உதவிபெற்ற தன்னாட்சி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுள் ஒன்றான ,  சென்னை நுங்கம்பாக்கம்ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ள லயோலா கல்லூரி 1925  ஆம்  ஆண்டில் தொடங்கப்பட்டது.  சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்லூரி   NAAC  "ஏ" தர சான்று பெற்றது.   

 அவர்கள் சட்டவிரோதமாக  கோவில் நிலங்களையும், அத்துடன்  பெரிய பொது நீர்  நிலைகள் மற்றும் புறம் போக்கு நிலங்களையும்   ஊழல் மிக்க  திராவிட அரசியலவாத கட்சிகளின்உதவியுடன்  ஆக்கிரமித்து உள்ளதாக  , தற்போது  சமூக ஊடகங்களில்  வதந்திபரவி வருகிறது.

 சொசைட்டி ஆப் ஜீசஸ்  (ஜேசுயிட்ஸ்)  என்கிற  அமைப்பை சேர்ந்த ரோமன் கத்தோலிக்  கிறிஸ்தவ பாதிரியார்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள  இந்த கல்லூரி மெட்ராஸ் யூனிவர்சிட்டி  உடன்    இணைக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கும் மற்ற பொது நிறுவனங்களுக்கும் லயோலா கல்லூரி சுமார் ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

 இந்த பாக்கி பல வருடங்களாக  சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது . ஆனாலும்     இந்த கல்லூரிக்கு   சென்னை    மாநகராட்சி  மீது உள்ள ஆதிக்கத்தினால் இந்த பாக்கியை வசூல் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை சென்னை    மாநகராட்சி முன்னெடுக்கவில்லை என்றும்  கூறப்படுகிறது..

 இந்தப்   பிரச்சினைகளும்சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் பொதுமக்களின் கவனத்துக்கு நம்மால் பரவலாக எடுத்துச் செல்லப்பட்டது. அதனால் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பும் மாநகராட்சிக்கு எதிரான கண்டனங்களும்மிகவும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆகவே இனியும் இந்த நிலையை நீட்டிக்க  முடியாது  என்று கல்லூரி நிர்வாகிகளும் சென்னை மாநகராட்சியும் என்று நன்கு அறிந்து கொண்டதாகவும்வேறு வழியில்லாமல் கல்லூரி நிர்வாகத்திடம் பாக்கியை வசூல்  செய்ததாகவும்சொல்லப்படுகிறது 

நமது தமிழ்நாடு முன்னேற்ற கழகம்,  தமிழக அரசாங்கத்தின் சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளை ஆகும். நாங்கள் கடந்த ஜனவரி 23ஆம் தேதி  அன்று நமது கழகத்தின் தலைவரும்,  உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான டாக்டர் எஸ் கே சாமி ஜி அவர்களின்   தலைமையிலும்,   வழிபாட்டிற்குரிய ஸ்ரீ மன்னார்குடி ஜீயர் அவர்களுடைய முன்னிலையிலும்,  மற்ற ஆன்மீக,  ஹிந்து மதபாதுகாப்பில் அக்கறை உள்ள தலைவர்  பெருமக்களின் பங்களிப்புடனும்,   சென்னை நுங்கம்பாக்கம்வள்ளுவர் கோட்டத்தில் இந்த விஷயங்களை பொதுமக்களின் பார்வைக்கு எடுத்து செல்லவும்,  வதந்திகளை நிறுத்தி உண்மை தன்மையை வெளிக் கொண்டு வரவும்,  லயோலா கல்லூரி நிர்வாகம், தமிழ்நாடு அரசு, ஹிந்து அறநிலையத்துறை ஆகியவைகளின்  கவனத்தை இந்த விஷயங்களில் ஈர்ப்பதற்காகவும், ஒரு பொதுமக்கள் கவனயீர்ப்பு அறப் போராட்டத்தை நிகழ்த்தினோம்.

 அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் லயோலா கல்லூரி  தாங்கள் வசமுள்ள நிலத்தின் உரிமை பத்திரங்களை பொதுஜனங்கள் அறிவதற்காக பொது வெளியில்  உண்மை தன்மையுடன் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

மேலும் நமது கழகத்தின் உயர்நிலை நிர்வாகிகளின் கூட்டம்கடந்த 26 ஜனவரி அன்று நடத்தப்பட்டு, இந்த விஷயத்தை உலகிலுள்ள நமது சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரது கவனத்திற்கும் கொண்டு வருவதற்காக, நமது மூத்த வழக்கறிஞர்  டாக்டர் எஸ் கே சாமி மூலம் லயோலா கல்லூரி நிர்வாகத்துக்கு ஒரு  சட்டப்படியான பொது வக்கீல் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அந்த  பொது வக்கீல் நோட்டீஸ்  சமூக ஊடகங்கள் மூலமாக  தெரிவிக்கப்பட்டது.

இந்த பொது வக்கீல்  நோட்டீஸ் மூலம், கல்லூரி நிர்வாகம் தாங்களாக முன்வந்து தங்கள் வசம் உள்ள நிலங்களின் உரிமை பத்திரங்களை பொது வெளியில் பதிப்பிக்க வேண்டும்,  மற்றும் தாங்கள்சட்டப் பூர்வமாகத்தான் தங்கள் இடங்களில் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த   நோட்டீஸின்  ஒரு மாதத்திற்குள்,  அவ்வாறு  செய்ய தவறும் பட்சத்தில்,  லயோலா கல்லூரி,  நிஜமாகவே கோயில் நிலத்தையும்,  நீர்நிலைகளையும்,  புறம்போக்கு நிலங்களையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று பொதுமக்கள்  நம்ப வேண்டிய நிலைமைஏற்படும் என்றும்,  அதன்படி சட்டபூர்வமான விளைவுகளையும் நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்  என்றும்வலியுறுத்தப்பட்டது  .

ஆனால் இதற்கு முன்பே நிறைய அவகாசம் கொடுத்து, லயோலா கல்லூரி  நிர்வாகத்திடம் நாம் இந்த அச்சங்களில்உண்மை  தன்மைஇருக்கிறதா இல்லையா என்பதை அவர்களுடன்  தொடர்பு கொண்டு விசாரித்தபோது அதற்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை. மௌனமும் அல்லது  மழுப்பலோதான் பதிலாக கிடைத்தது. அதனால் இந்த அச்சங்கள் ஆதாரமற்றவை அல்ல என்று சாதாரண மனிதர்கள் கருதுவதற்கு இது வழிவகுத்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக , நெருப்பில்லாமல் புகையாது  என்ற பொது  நம்பிக்கை ,  குறிப்பாக  இந்த லயோலா கல்லூரி விஷயத்தில் நிரூபணம் ஆவது போல தோன்றுகிறது 

இந்த மனு மூலம்,  , தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் , ஆகிய நாம்   பின்வரும் பிரச்சினைகள் வேண்டும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று  கோருகிறோம். 

1. லயோலா கல்லூரி நிர்வாகம் தாங்களாக முன்வந்து தங்கள் வசம் உள்ள நிலங்களின் உரிமை பத்திரங்களை பொது வெளியில் பதிப்பிக்க வேண்டும்; மற்றும் முழு குத்தகை ஒப்பந்தங்கள் மற்றும் காலாவதியாகும் தேதிகள் ஆகியவற்றை வெளியிட வேண்டும்.      

2. லயோலா கல்லூரி நிர்வாகிகள் தங்களது அனைத்து அரசு கட்டணங்கள்/ நிலுவைத் தொகையை சென்னை கார்ப்பரேஷன் , டி.என்.இ.பி., மற்றும் மெட்ரோ வாட்டர் போன்றவற்றுக்கு பாக்கியில்லாமல்  செலுத்தி உள்ளார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் .              

3. தமிழ்நாடு இந்து  அறநிலையத்துறை,   தங்கள்  அதிகார வசத்தில் உள்ள  கோவில்களுக்கு சொந்தமான எந்த எந்த நிலங்களை இந்து மதம் அல்லாத எந்த  நபருக்கு அல்லது கூட்டத்துக்கு அல்லது  குழுக்களுக்கு, குத்தகைக்கு கொடுத்திருக்கிறார்கள் என்ற முழு விவரங்களையும் அட்டவணையாக பொது களத்தில்  வெளியிட வேண்டும்;  தவிரவும் அதே மாதிரி லயோலா கல்லூரிக்கு குத்தகை கொடுத்திருந்தால் அந்த  விவரங்களையும்முழுவதுமாக  வெளியிட வேண்டும் . 

இந்து கோவில் நிலத்தில் நடத்தப்படும், கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பான இந்த லயோலா கல்லூரி, ரோமன் கத்தோலிக்க மதத்தின்  வெளிப்படையான மற்றும் இரகசிய மதமாற்றம் செய்யும் கேந்திரமாக மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு   கல்லூரி கண்காட்சியில் நாட்டுப்புற கலைகளுக்கு  ஆதரவு என்ற போர்வையில், , வழிபாட்டுக்குரிய பாரத மாதா மற்றும் இந்து பெண்கள்  படங்கள் ஆபாசமாக  சித்தரித்து இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த மனு,  உண்மையை கண்டறிய தமிழ்நாடு முன்னேற்றக்  கழகம்மேற்கொண்ட இன்னொரு முயற்சியாகும்.  

இந்த மனுவில் இந்துமத ஆர்வலர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 

அப்பொழுதுதான் இந்து மதத்தின்  சொத்துக்களையே  வெட்கமில்லாமல் உபயோகப் படுத்திக் கொண்டு,  இந்து மதத்தையே அழிக்க முற்படும் மதமாற்று கும்பல்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை தடுத்து நிறுத்த வழிவகை செய்ய முடியும்.

இப்படிக்கு,   அன்புடன்

டாக்டர் எஸ்.கே.சாமி

வழக்கறிஞர்

எண் 34, 1 வது  குறுக்கு தெரு, கங்கா நகர், கோடம்பாக்கம், சென்னை -600024

தொடர்புக்கு: 9968441440, 7550015555

மின்னஞ்சல்: - advatedrsksaamy@gmail.com

 பெறுநர்

முதல்வர், லயோலா கல்லூரி, சென்னை.

 

 நகல்.

1. இந்தியாவின் மாண்புமிகு ஜனாதிபதி,               

ராஷ்டிரபதி பவன், புது தில்லி.

2. மாண்புமிகு பிரதமர்,             

இந்திய அரசு , புது தில்லி.

3. மாண்புமிகு உள்துறை அமைச்சர்,             

இந்திய அரசு , புது தில்லி.

4. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்,             

ராஜ் பவன், சென்னை.

5. மாண்புமிகு முதல்வர்,            

தமிழக அரசு, சென்னை

6. மாண்புமிகு கலாச்சாரம்மற்றும் இந்து சமய அறநிலையத்துறை. அமைச்சர், தமிழக அரசு, சென்னை             

7. மாண்புமிகு நிதி அமைச்சர் ,             

தமிழக அரசு, சென்னை

8. தலைமைச் செயலாளர், தமிழக அரசு, சென்னை             

9. வருவாய் செயலாளர், தமிழக அரசு, சென்னை             

10. செயலாளர், கலாச்சாரத் துறை, தமிழக அரசு, சென்னை             

11. கமிஷனர், இந்து சமய அறநிலையத்துறை,

தமிழக அரசு , சென்னை

12 . கமிஷனர் , சென்னை கார்ப்பரேஷன்

13. இந்தியப் பிரதமர் அலுவலகம் ,               

இந்திய அரசு, புது தில்லி.

14. முதலமைச்சர் செல், செயலகம், தமிழக அரசு, சென்னை             

15. மாண்புமிகு ஸ்ரீ ஜே.பி, நட்டா, தலைவர், பாஜக, புது தில்லி             

16 . டாக்டர் . எல்.முருகன் , மாநிலத் தலைவர், பாஜக , சென்னை .

 

0 have signed. Let’s get to 500!
At 500 signatures, this petition is more likely to be featured in recommendations!