Exempt Ph​.​D Semester Fees

Exempt Ph​.​D Semester Fees

0 have signed. Let’s get to 500!
At 500 signatures, this petition is more likely to be featured in recommendations!
All India Private Colleges Employees Union started this petition to The Chief Minister of Tamilnadu and

மாண்புமிகு முதல்வர் அவர்களே,

அண்ணா பல்கலைக்கழகமானது, சுமார் 8,000 ஆராய்ச்சி மாணவர்களிடம் இந்த செமஸ்ட்டருக்கான கல்வி கட்டணம் (ரூ.10,000 / ரூ.12,500) செலுத்துமாறு வற்புறுத்துகிறது. தமிழக அரசின் அனுமதியின் பேரிலேயே கல்வி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்று பத்திரிக்கை வாயிலாக இதற்கு விளக்கம் வேறு கூறியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 8000-திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர் படிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தனியார் கல்லூரியில் ஆசிரியராக குறைந்த ஊதியத்திற்கு பணி செய்கிறார்கள். அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பல்கலைக்கழக கல்லூரிகளில் வேலை செய்கிறார்கள். ஒரு செமஸ்டர் கல்வி கட்டணமான ரூ.10,000 (அல்லது ரூ.12,500) என்பது இவர்களுக்கு 15 நாள் முதல் ஒரு மாத ஊதியமாகும். இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில், தனியார் கல்லூரிகள் பல மாதங்களாக ஊதியம் கொடுக்காத நிலையில், இந்த பெரிய தொகையை செலுத்த சொல்லி நிர்பந்தபடுத்துவது நியாயமல்ல.

ஒரு மாணவரால் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என்றால் பல வருட ஆராய்ச்சி படிப்பு பாதியில் நின்று விடும். தற்போதைய நிலையில் ரூ.12,500 செலுத்த வேண்டும் என்றால், ஆராய்ச்சி மானவ்ரகள் தங்கள் நகையை அடமானம் வைத்தோ, கடன் வாங்கியோ கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இந்த நிலையில் AICTE அமைப்பும் NITTTR பயிற்சி என்று சொல்லி ரூ.10,000 கேட்டு துன்புறுத்துகிறது. இவ்வாறு துன்புறுத்துவது ஒரு 'பிளாக்மெயில்' போன்ற தோற்றமே தருகிறது.

AICTE அமைப்பு Ph.D அவசியம் என்றும், அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வேண்டும் என்றும் ஒற்றை காலில் நிற்பது அடிமைத்தனத்தை ஆசிரியர் மீதும், ஆசிரியர் ஆக முயற்சிக்கும் மாணவர்கள் மீதும் திணிப்பதாகவே அமைகிறது. உடனடியாக இந்த ஆணையை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பி பெற வேண்டும். சுமார் ரூ.10 கோடி கல்வி கட்டணம் வசூலிக்காமல் தேசத்தின் சிறந்த பொறியியல் பல்கலைக்கழகத்தை நடத்த முடியாது என்று சொல்வது பொருத்தமாக இல்லை. கல்வியில் மாற்றம் உயர்ந்த நிலையில் உள்ள, பல்கலைக்கழகத்திடமிருந்தும், அதிகம் படித்த அதன் மதிப்புமிக்க ஆசிரியரிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம்.


தமிழக அரசானது இந்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென 8,000 ஆராய்ச்சி மாணவர் (ஆசிரியர்கள்) சார்பாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி!


K.M.கார்த்திக்
Founder, AIPCEU Teachers Union
+91 9942324048/ +91 7395868135
www.aipceu.in
joinaipceu@gmail.com
https://www.facebook.com/founder.aipceu.9

0 have signed. Let’s get to 500!
At 500 signatures, this petition is more likely to be featured in recommendations!