TNUSRB SI தேர்வு முறைகேடு

TNUSRB SI தேர்வு முறைகேடு

0 have signed. Let’s get to 500!
At 500 signatures, this petition is more likely to be featured in recommendations!
Kaarthikeyan M started this petition to Tamilnadu Chief Minister

தமிழக முதல்வர் அய்யா திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,

2019 ஆம் ஆண்டு நடந்த காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வில் ஏற்பட்ட மோசடியால் ஏமாற்றம் அடைந்த மாணவர்களில்  ஒருவராக இம்மனுவை சமர்ப்பிக்கிறேன்.12 மற்றும் 13 ஜனவரி 2020 அன்று தேர்வுகள் நடந்தன.இத்தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் 17 அன்று வெளியானது.அம்முடிவுகளை உற்று நோக்கினால்  குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தேர்வர்களின் தேர்வு எண்கள் வரிசையாக இருந்தன. இவ்விசயம் குறித்து விசாரித்த போது தான் தெரிந்தது அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட பயிற்சி கூடங்களில் படித்தனர் என்றும் இரவில் ஒன்றாக அமர்ந்து இணையதளத்தில் வரிசையாக விண்ணப்பத்து தொடராக எண்கள் வருவது போல் பார்த்துக்கொண்டனர்.பின்பு பரிட்சை அறையில் கலந்தாலோசித்து எழுதியுள்ளனர்.இது தொடர்பாக தேர்வு ஆணையித்திடம் புகார் அளித்து மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.அவ்வழக்கு கிடப்பில் உள்ளது. இந்நிலையில் தேர்வர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது , அதில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களே அதிக எண்ணிக்கையில் தேர்வாகியுள்ளனர். இதனால் நேர்மையான முறையில் தேர்வு எழுதியவர்கள் தேர்வாகவில்லை.அதனால் இவ்விசயத்தை தங்கள் முன் கொண்டு வர போராடுகிறோம். தங்களால் மட்டுமே நேர்மையான முறையில் பங்கேற்றவர்களுக்கு நல்ல வழி மற்றும் தீர்ப்பு கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறோம்.என்றைக்கும் தமிழக மக்களுக்காக துணையாக இருக்கும் தங்களையே நம்புகிறோம்.

தங்கள் கணிவான கவனத்திற்க்கு கோண்டு வரவே இத்தளத்திலும் பயனிக்கின்றோம்.

0 have signed. Let’s get to 500!
At 500 signatures, this petition is more likely to be featured in recommendations!