Protest for Jawadhu Children Rights against child Labour

Protest for Jawadhu Children Rights against child Labour

0 have signed. Let’s get to 200!
At 200 signatures, this petition is more likely to be featured in recommendations!
thali sangili started this petition to M.K Stalin

ஜவ்வாது மலையில் வாழும் அரசுப்பள்ளி ஆசிரியை தோழர் மகாலட்சுமி அவர்கள், தினந்தோறும் அங்கு வசிக்கும் பிள்ளைகளின் வாழ்வாதாரத்துக்கும், படிப்புக்கும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வருகிறார். குறிப்பாக, இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், அவர் குழந்தைகளின் வீட்டுக்கே சென்று குறைந்தபட்ச அடிப்படைப் பாடங்களை எடுப்பதுடன் அவர்களுக்கான உணவு, நாப்கின் என அடிப்படை தேவைகளை ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி உதவி செய்து வருகிறார் .
ஊரடங்கு தளர்வுகள் குறைந்து, பள்ளிகள் ஆரம்பித்த நிலையிலும் ஜவ்வாது மலையில் வாழும் குழந்தைகளின் கல்வி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் பஞ்சாலையின் முதலாளிகளால் அடிமாட்டு விலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு பருத்தி வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். சில குழந்தைகளை விருப்பத்துடனும், சிலர் பெற்றோர் ஒப்புதலுடனும், சிலர் பெற்றோருக்குக் கூட தெரிவிக்காமலும் மாற்றுத் துணி கூட இல்லாமல் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
என்னதான் குழந்தை தொழிலாளர்கள் என்பது சட்டதுக்கு புறம்பானது என்றாலும், இன்றும் இதை தைரியமாக செய்து கொண்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் சின்ன சேலம், திருவச்சூர் பகுதி மற்றும் சேலம் மாவட்டத்தில் இருக்கும் கூடியதலை வாசல் பகுதி என அங்கு இருக்கும் பஞ்சாலையின் உரிமையாளர்களையும் இடைதரகர்களையும் தோழர் மகாலட்மி எதிர்த்து பேசி வருகிறார். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசையும் உரிய அதிகாரிகளையும் சந்தித்து இந்த சட்ட விரோதமான செயல்லுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
நாம் செய்ய வேண்டியவை !
அவருடைய இந்தக் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான போராட்ட குரலை நாமும் இணைந்து வலுப்படுத்துவதே ஆகும் !
கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியை #protestJawadhuchildrenrights என்ற hashtag-உடன் சேர்த்து பகிரவும். அரசின் கவனத்திற்கு இதை கொண்டு போகும் வரை இதை பகிர்ந்துக் கொண்டே இருப்போம் !
Video link : https://www.facebook.com/100004625980471/posts/2064419223722257/?d=n

0 have signed. Let’s get to 200!
At 200 signatures, this petition is more likely to be featured in recommendations!