Demand for Pollachi district - பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க கோரிக்கை

0 have signed. Let’s get to 1,000!


பொள்ளாச்சி மாவட்டம் உருவாக வேண்டும் என்று நம் பகுதி மக்கள், மக்கள் நலச்சங்கங்கள், அரசியல் கட்சிகள் என பலரும் பல வருடங்களாக கோரிக்கை வைத்து கொண்டு இருக்கின்றனர்.

2019 வருடம் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன, ஆனால் கொங்கு மண்டலத்தில் ஒரு மாவட்டம் கூட புதியதாக உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவ கல்லூரி & மருத்துவமனை,

அரசு பொறியியல் கல்லூரி,

செவிலியர் கல்லூரி,

ஆட்சியர் அலுவலகம்,

மாவட்ட கோர்ட் அலுவலகம்,

அரசு விளையாட்டு & நீச்சல் வளாகம்,

சாலை & பிற உள்கட்டமைப்பு வசதிகள்,

வேளாண் அலுவலகம்,

காவல்துறை அலுவலகம்

முதலியவை வர பொள்ளாச்சி மாவட்டம் அவசியமாக விரைவில் உருவாக வேண்டும்.

சமீபத்தில், பொள்ளாச்சியை ஏற்றுமதி சிறப்பு வாய்ந்த நகரமாக (Pollachi - Town of Export Excellence for Coir Products) மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தென்னை விவசாயம், தொழில் வளம் & வேலைவாய்ப்பு பெருகும்.

வால்பாறை : தற்போது வால்பாறை மக்கள் 105 முதல் 125 கிலோமீட்டர்கள் பயணம் செய்து மாவட்ட தலைநகரை அடைய வேண்டும். கோவை சென்றுவர 12 மணிநேரம் தேவைப்படும். பொள்ளாச்சி மாவட்டமாக உருவானால் பயணம் தூரம் & நேரம் மிகவும் குறையும். வால்பாறையில் சார் ஆட்சியாளர் (சப் கலெக்டர்) அலுவலகம் உருவாக எளிதாக இருக்கும். வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாகவும் அமையும்.

உடுமலை & மடத்துக்குளம் : உடுமலை & மடத்துக்குளம் ஆகிய பகுதிகள் முன்பு பொள்ளாச்சியுடன் கோவை மாவட்டத்தில் இருந்தது. உடுமலை (28 கிலோமீட்டர்கள்), மடத்துக்குளம் (45 கிலோமீட்டர்கள்) ஆகிய நகரங்கள் பொள்ளாச்சியுடன் நேரடியாக ரயில் & தேசிய நெடுஞ்சாலை மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள மாவட்ட தலை நகரான திருப்பூருக்கு நேரடி ரயில் வசதிகள் இல்லை, சாலை வழியாக 65 கிலோமீட்டர்கள் (உடுமலையிலிருந்து ) & 70 கிலோமீட்டர்கள் (மடத்துக்குலத்திலிருந்து) பயணம் செய்ய வேண்டும்.

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி, தென்னை & பிற விவசாயம் செழிக்க உதவும். தக்காளி சாஸ் & ஜாம் தொழிற்சாலைகள் உருவாகும்.

விவசாயம் : ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் உருவாகும் பொழுது பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு வட்டங்கள் ஒன்றாக ஒரே மாவட்டத்தில் இருந்தால் திட்டம் நிறைவேற்ற எளிதாக இருக்கும். 

Demand for new Pollachi District :

Pollachi region (which includes taluks such as Pollachi, Kinathukaduvu, Anaimalai, Valparai, Udumalaipettai & Madathukulam) are agriculture based regions of Tamilnadu.

Pollachi region have many industries, especially the coir based industries, tools manufacturing industries in the plains & tea industries in Valparai hilly areas. Pollachi is well connected with Rail & road transport. Pollachi is one of the loksabha constituencies.

People demand for creating new Pollachi district existed for many decades in Pollachi region. New district creation with Pollachi as headquarters is very important for the overall growth of the Pollachi region.

Toursim :

Pollachi region have lot of tourist spots, temples.

1) Anaimalai Tiger Reserve, Topslip

2) Valparai Tea estates, forests, waterfalls

3) Dams such as Aliyar, Amaravathi, Thirumoorthi, Sholayar

4) Anaimalai Maasaniamman temple

5) Thirumoorthy temple & Kinathukaduvu Murugan temple

6) Sulakkal Maariamman temple