#GO BACK SURAPPA

#GO BACK SURAPPA
Why this petition matters

மாண்புமிகு முதல்வர் அவர்களே,
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.சூரப்பா அவர்கள், தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். அரியர் மாணவருக்கு தேர்ச்சி என்ற முதலமைச்சரின் நிவாரணத்தை, எதிர்க்கும் விதமாக திரு.சூரப்பா பொய் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறார். AICTE தனக்கு மின்னஞ்சல் அனுப்பியது, அரியர் மாணவர்கள் தேர்ச்சியை AICTE எதிர்க்கிறது என்று வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார். உயர்கல்விதுறை அமைச்சர் திரு.அன்பழகன் இந்த வதந்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் பிற அரசு பல்கலைக்கழகங்களும், மத்திய அரசின் UGC-இடமிருந்து அதுபோல எந்த மடலும் வரவில்லை என்று உறுதிபட கூறியுள்ளன.
அரியர் மாணவர் அனைவரும் தேர்ச்சி பெற்றால் தமிழகத்தில் இருந்து 4 லட்சம் பொறியாளர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அவர்கள் உலகம் முழுவதும், நாடு முழுவதும் உள்ள வேலைகளுக்கு செல்வார்கள். பொறியியல் அல்லாத பிற வேலைவாய்ப்பிற்கும் செல்வார்கள். தொழில் முனைவோராக உருவாகவும் வாய்ப்புள்ளது. தேர்ச்சி பெரும் அரியர் மாணவர்கள் முதலில் ஒரு சிறு வேளையில் சேர்ந்து, மேலும் கல்வி கற்று, பயிற்சி செய்து, அனுபவம் பெற்று, சில ஆண்டுகளில் சிறப்பான ஒரு பொறியாளராகவோ அல்லது ஒரு சிறந்த பட்டதாரியாகவோ, சமூகத்திற்கு ஒரு நல்ல குடிமகனாகவோ மாறக்கூடும்.
அந்த அறிய வாய்ப்பை, அரியர் மாணவருக்கு கொடுத்த நீங்கள் அதற்கு துணை புரியாமல், வினை புரியும் துணை வேந்தர் திரு.சூரப்பாவை, நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவர் சார்பாக கேட்டு கொள்கிறேன்.
கொரோனா காரணமாக அரியர் பாடத்திற்கு தேர்வெழுத தேர்வு கட்டணம் செலுத்த முடியாத மாணவருக்கு பணம் செலுத்தும் வாய்ப்பை தரும் exam fees portal-ஐ திரு.சூரப்பா அவர்கள் முடக்கி விட்டார். அதை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்.
திரு.சூரபாவின் நிர்வாகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பிற முறைகேடுகளின் தொகுப்பை நாளை வெளியிடுகிறேன்.
நன்றி!
K.M.கார்த்திக்
சமூக சேவகர்
AIPCEU ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர்
Decision Makers
- Hon'ble CM of Tamilnadu
- Hon'ble Governor of Tamilnadu