Save Farmers and our Lands at NH45A -Villupuram to Nagapattinam 4 lane expansion Project

Save Farmers and our Lands at NH45A -Villupuram to Nagapattinam 4 lane expansion Project

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!
ANANDHAN Annasamy started this petition to regrgenl@nic and

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம்  வரை வசிக்கும் விவசாய மக்களாகிய நாங்கள், NH45 A தேசிய நெடுஞ்சாலை 4 வழி விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் நம்மிடம் பேசியபோது 

"அரசு நிலம் எடுப்பதை நாம் மறுக்க முடியாது,' மறுத்தால் நீதிமன்றத்திற்கு 12 ஆண்டுகள் அலைய வேண்டும்'  என மறைமுக மிரட்டலும்,  தவிர நீங்கள் மறுப்பு தெரிவிக்காத பட்சத்தில்   

“தங்கள் நிலத்திற்கு சந்தை மதிப்பில் அல்லது வழிகாட்டி மதிப்பில் இதில் எது அதிகமோ அதிலிருந்து நான்கு மடங்கும், மேலும் அரசின் கருணை தொகையும் கூடுதலாக கிடைக்கும்” 

என்பது போன்ற அதிகாரிகளின் பொய்யான வாக்குறுதிகளான வார்தைகைளை நம்பி , நம் வாழ்வாதரம் பாதிக்க படாமல் அரசு நமக்கு உதவும் என, முழு விபரம் விபரம் புரியாமல் எங்களின்  நில ஆவணங்களை  சமர்ப்பித்தோம்.

ஆனால், எங்களை கேட்காமலேயே, எங்களின் கவனத்துக்கு வராமலேயே, எங்களின் ஒப்புதல் இல்லாமலேயே எங்கள் நிலம் கையகப்படுத்த பட்ட அறிக்கையை பார்த்தபோது அதிர்ந்தோம், மேலும்  

ஒரு சிலருக்கு மிக குறைந்த இழப்பீடு தொகையை கணக்கில் வரவு வைத்து உள்ளதை கேள்வியுறும் போது இன்றைய நிலையில்  என்ன நடக்கிறது என புரியாமலும் நமக்கு என்ன நடக்க போகிறது என்பதை அறிய முடியாமலும்  மேற்கொண்டு என்ன செய்வது என தெரியாமலும் மனஉளைச்சலில் நிம்மதி இழந்து, ‘நாம் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம்’  என்பதை உணர்கிறோம். 

வெளிப்படையாக விபரம் தெரிவிக்காமல் , விவசாய படிப்பறிவில்லாத எங்களிடம் கையொப்பமிட்ட ஆவணங்களை பெற்று கொண்டு எங்களின் நிலத்தை, வீடுகளை அழிக்க இருப்பதை உணர்ந்து நாங்கள்.  ஒவ்வொருவரும் தனித்தனியாக மனு செய்தும் அதிகாரிகளை அணுகியும் எந்த நியாயமான பதிலும், பலனும் கிடைக்காத நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிககளில் ஒருவராக,

கீழ்கண்ட விபரங்களுடைய நான் எனது விவசாய நிலத்தை  / வீட்டை 4 வழி சாலைக்கு தர விரும்பவில்லை  என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன்.

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!