மது விலக்கு (Alcohol exclusion)

0 have signed. Let’s get to 1,000!


பொருள் : மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக முட கோரி மனு.

கனம் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி K பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்.

ஐயா! இந்த கொரானா நோய் காலத்தில் தாங்கள் எடுத்து வருகின்ற அனைத்து கட்ட நடவடிக்கைகளும் பாராட்டுதற்குறியது. 144 சட்டம் அமலில் இருந்த கால கட்டத்தில் தமிழகத்தில் மதுவினால் 98% குற்றங்கள், 99% கொலைகளும் குறைந்துள்ளதும், இந்நாட்களில் பலர் தங்கள் குடிபழக்கத்தில் இருந்து திருந்தி வாழ்கின்றார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. 

நம் பாரதத்தில்,

  • மது ஒவ்வொரு 96 நிமிடங்களுக்கும் ஒரு இந்தியனைக் கொல்கிறது. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 15 பேர்.
  • இந்த மதுபழக்கத்தினால் 1 லட்சம் சாலை விபத்து நேரிடுகிறது 
  • இந்தியாவில் 40% கல்லீரல் வியாதிகளுக்கு மது பழக்கம் தான் காரணம்
  • 44% கொலைகள் தமிழ்நாட்டில் மதுவினால் ஏற்படுகின்றதும்
  • 80% விதவைகள் மதுவினால் விதவைகள் ஆகின்றார்கள் என்பதும் மிக வருந்தத்தக்க செய்தி.
  • மது அடிமைத்தனம் அநேக குடும்பங்களை சீரழித்து உள்ளது.
  • குடும்ப வன்முறைக்கும் பாலியல் வான் கொடுமைகளுக்கும் மது போதை காரணமாக அமைகிறது

இந்த பாதிப்புகள் தற்போது கொரானாவினால்  வந்த பாதிப்புகளை விட பல மடங்கு அதிகமானது.

இந்த அவசர காலத்தில், எங்கள் தாழ்மையான வேண்டுகோளை ஏற்று, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அடைத்துவிட மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நன்றி