குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து கையெழுத்து இடவும்

0 have signed. Let’s get to 5,000!


ஒரு அரசு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதை எப்படி எதிர்க்க முடியும்? அரசைக் கேள்வி கேட்க வேண்டுமாயின் நீதி மன்றத்தை அணுகலாமே. அதை விடுத்து சட்ட விஷயத்தை உணர்ச்சி பொங்க பேசுதல், உணர்வுகளைத் தூண்டி விடுதல், ரயில், பஸ் எரிப்பு, சட்ட நகலை கிழிப்பது, தீயிட்டு கொளுத்துதல், பொது மக்களை துன்புறுத்துதல், வன்முறையில் இறங்குதல், என்பதெல்லாம் ஒரு ஜனநாயக நாட்டில் தான் உள்ளோமா என சந்தேகிக்க வைக்கிறது.

எதிர் கட்சியினரின் தரம் தாழ்ந்த ஜனநாயக விரோதப் போக்கை கண்டிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.இந்திய குடி மக்கள் மத்தியில் எந்த விதத்திலும் பேதம் பாராட்டாத சட்டத்தை வரவேற்கிறேன்.இவ்விஷயத்தில் மோதி சர்க்காருக்கு துணை நிற்பேன் என உறுதி பூணுகிறேன்

நன்றி