பண்பாாட்டை மீட்க... மஞ்சுவிரட்டை மீட்டெடுக்க...

பண்பாாட்டை மீட்க... மஞ்சுவிரட்டை மீட்டெடுக்க...
Why this petition matters

மஞ்சுவிரட்டு பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;
பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டை, கடந்த சில ஆண்டுகளாக வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டாக மாற்றும் அவலத்தைப் போக்கி மஞ்சுவிரட்டை மரபுவழி நடத்த "மஞ்சுவிரட்டு பாதுகாப்பு மாநாடு" நடத்தப்பட்டு, இதில் மஞ்சுவிரட்டு நடத்தும் கிராம/நாட்டு கட்டமைப்பு உள்ள கமிட்டியாளர்கள்/ தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவையினர் / தமிழ்நாடு வடமாடு நல சங்கம் / பல்வேறு சமூக நல அமைப்பினர் கலந்துகொண்டு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசிடமும் முதலமைச்சர் அவர்களிடமும் முன்வைக்கப்படுகின்றன.
1) சிறாவயல், கண்டிப்பட்டி, அரளிப்பாறை, நெடுமறம், கண்ட்ரமாணிக்கம், எம் புதூர், தேவபட்டு போன்ற அரசுப்பட்டியலில் உள்ள ஊர்களில் காலம்காலமாக நடக்கும் மஞ்சுவிரட்டு விளையாட்டில், தற்போது ஜல்லிக்கட்டு முறையினைத் திணித்து மஞ்சுவிரட்டை அழித்துவருகிறார்கள். எனவே இதனை உடனடியாக நிறுத்தி பாரம்பரிய முறைப்படி நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
2. ஜல்லிக்கட்டுக்கு வரைமுறை செய்துள்ளதைப்போல் மஞ்சுவிரட்டும் பாதுகாப்புடன் நடக்க, பார்வையாளர்களும் மாடுகளும் பாதிக்காத வண்ணம் வரைமுறை ஏற்படுத்த, ஐ.ஏ.எஸ் அரிகாரி தலைமையிலான ஒரு குழுவினை ஏற்படுத்தி மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுகட்டு, வண்டிப்பந்தயம் ஆகிய அனைத்து வீரவிளையாட்டுகளுக்கும் வரைமுறை ஏற்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டினைவிட மஞ்சுவிரட்டையே பெண்கள் உள்பட பல லட்சம் பார்வையாளர்கள் நேரில் வழக்கம்போல் காண முடிவதோடு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் பாதுகாப்புடன் இதனைக் காண வழிவகை செய்யவேண்டும்.
3. மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, வடமாடு நடைபெறும் அனைத்து ஊர்களையும் அரசு இதழில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அரசு கெஜெட்டில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஜல்லிக்கட்டுளை இந்த ஆண்டு அரசே செலவு செய்து நடத்துவதைப்போல், தமிழ்நாடு அரசிதழில் உள்ள மஞ்சுவிரட்டுகளைஅரசே செலவு செய்து நடத்த வேண்டும்.
5. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, வடமாடு, வண்டிப்பந்தயம் ஆகிய வீரவிளையாட்டு பண்பாட்டு விழாக்களில் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு அரசு, அவர்களின் குடும்பத்திற்கு ரூ5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
6. தைப்புரட்சியின் போது அலங்காநல்லூரில் போடப்பட்ட சி.பி.சி.ஐ.டி வழக்குகளும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டவாதிகள்
மீது மட்டுமல்லாது மாடு வளர்ப்பவர்கள் மீதும் போடப்பட்ட
நிலுவையில் உள்ள வழக்குகள் அணைத்தும் திரும்பப்பெற வேண்டும். அது
வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டதால்
உடனடியாக அவ்வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
7. மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுகட்டு, வண்டிப்பந்தயம் என காலம்காலமாக நடக்கும் இவ்விழாக்களுக்கு தற்போது ஊரார் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
மேலும் மஞ்சுவிரட்டுக்கு காளைகளை கொண்டு செல்லும் போது, தொலைவில் உள்ள ஊர்களுக்கு வாகனத்தில் தான் ஏற்றி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் வாகனத்தின் மீதும் வழக்குகள் பதியப்படுகிறது. மேலும் நீதிமன்றங்களில் கடந்த காலங்களில் 200 ரூபாயாக இருந்த அபராதத்தொகை இப்போது ஆயிரக்கணக்கில் விதிக்கப்படுகிறது. இவற்றினை உடனடியாக நிறுத்திக்கொள்ள ஆணையிட வேண்டும்.
8. ஆண்டுக்கு சிலமாதங்கள் மட்டுமே இவ்விழாக்கள் நடக்க அனுமதிக்காமல், ஆண்டு முழுவதும் நடக்க அனுமதி வழங்க வேண்டும்.
9. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாட்டின் அடையாளமான “காளை மாட்டினை அடக்கும் சிலை ஒன்றினை” தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
10. அரசு பாடப் புத்தகங்களில் மஞ்சுவிரட்டு பற்றிய வரலாறுகள், பாரம்பரியம், மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு உருவான வரலாற்றினை இடம்பெறச்செய்ய வேண்டும்.
11. தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம் 2019 இல் நாட்டு மாடுகளை அழிக்கும் வகையில் திருத்தப்ப்ட்ட சட்டங்களை தற்போதைய அரசு உடனடியாக திரும்பப்பெற்று, நாட்டு மாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும்.
12. ஆவின் மூலம் விற்கப்படும் பால் விற்பனையில், கிராமங்களில் நேரடியாக வாங்கப்படும் நாட்டு மாட்டுப் பாலிற்கு அதிக விலை கொடுத்து வாங்கி அதனை மக்களுக்கு அதிக விலைக்கு வழங்கலாம். இதனால் நாட்டு மாடுகள் ஊக்குவிக்கப்ப்டுவதோடு சந்ததிகள் மலட்டுத்தன்மை அடையமாட்டார்கள். (பிராய்லர் கோழி முட்டையை விட நாட்டுக் கோழி முட்டை அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் மக்கள் நல்ல பொருளை வாங்குவதற்குத் தயாராகவே உள்ளார்கள்).
13. ஆண்டுதோறும் அரசு பட்ஜெட்டில் வீரவிளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, வடமாடு போன்றவற்றினை அரசே நடத்துவதற்கு ஏதுவாக தனி நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
14. தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு மாடுகள் அடிமாட்டுக்கு கொண்டு செல்வது தடுக்கப்பட வேண்டும்.
15. நம் இந்த வீரவிளையாட்டினை தேசிய விளையாட்டில் இடம்பெறச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16. தமிழக அரசால் ஒதுக்கப்ப்ட்ட மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுத்து, நசுக்கப்பட்ட நிலையில் வாழும் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் சமூகத்தினை மேம்படுத்த நலவாரியம் அமைக்கவேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இதனை சிவகங்கை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு மஞ்சுவிரட்டில் வாடிவாசல் அமைத்து அதனை ஜல்லிக்கட்டுபோல் மாற்ற முயற்சித்தால் 16/1/2022 அன்று முதல் மஞ்சுவிரட்டான சிறாவயலில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.