பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு CTC யிடம் கோரிக்கை !

0 have signed. Let’s get to 5,000!


குற்றச்சாட்டு

// கனேயடித் தமிழர் பேரவையிடம் (CTC) உதவி கோரி வந்த ஒரு பெண்ணிற்கும் திரு. டேவிட் பூபாலப்பிள்ளை அவர்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு ஏற்பட்டிருந்ததாகவும் இது நீண்டகாலம் நீடித்ததாகவும் தெரியவந்துள்ளது. //

 // தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உதவி கோரி அந்த அமைப்பை நாடிய பலவீனமான ஒருவர் மீதான அதிகார துஸ்பிரயோகமாக இதனை கருத வேண்டும் //

கனேடியத் தமிழர் பேரவைiயில்(CTC)இடம்பெற்றதாக முறையிடப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகம்; குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கனேடியத் தமிழர் பேரவையிடம் வேண்டுகோள் விடுக்குமாறு எமது சமூகத்தை அழைக்கின்றோம்.

அத்துடன் கனேடியத் தமிழ் பேரவையின் தலைவர் வைத்திய கலாநிதி வடிவேலு சாந்தகுமாரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றோம்.

இந்த விடயம் தொடர்பில் கனேடியத் தமிழர் பேரவையிடம்(CTC)தமிழ் சமூகம் முன்வைத்த முறைப்பாட்டை அந்த அமைப்பு தொடர்ச்சியாக புறக்கணித்து வருகின்றது.

இந்த விடயம் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமலும் இது குறித்து வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமலும் கனேடியத் தமிழர் பேரவை செயல்பட்டு வருகின்றது.

இந்த சமூகத்தின் அங்கத்தவர்களாகவும் இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பும் சமூக நலன் விரும்புகின்றவர்களின் அதிகரித்த ஆதரவுடன் கனேடியத் தமிழர் பேரவையிடம்(CTC)பின்வரும் முக்கியமான மாற்றங்களை கொண்டு வருமாறு நாம் கோரி நிற்கின்றோம்.

 1. அந்த அமைப்பின் நிர்வாக சபையில் பால்நிலை சமத்துவத்தை பேணும் வகையிலான விதிமுறை மாற்றங்களை கொண்டு வருமாறு வலியுறுத்துகின்றோம்.

2.எதிர்காலத்தில் ஒரு பெண் தலைமையிடம் இந்த அமைப்பின் அடுத்த பருவ காலம் ஒப்படைக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றோம்.

3.சுயாதீனமான விசாரணை பொறி முறையின் மூலமாக முறைப்பாடுகள் ஆராயப்பட வேண்டும் என்று கோருகின்றோம்.

 கனேடியத் தமிழர் பேரவையில் (CTC) இடம்பெற்றதாக முறையிடப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோகம் குறித்து எமது சமூகத்தின் பிரதிநிதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த அமைப்பிடம் மேற்கொண்ட முறைப்பாடுகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வரை சென்றுள்ளார். இந்த நிலைமையினை தொடர அனுமதிக்க முடியாது என்பதனால் இந்த விடயத்தை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து ஒரு சமூகத்தின் ஆதரவுடன் இதனை அணுகுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

இந்த விடயத்தை பொது வெளிக்கு கொண்டு வந்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கனேடியத் தமிழர் பேரவையினை வலியுறுத்துமாறு உங்களை கோருவதற்கு முன்னர் இந்த அமைப்பில் இடம்பெற்ற துஸ்பிரயோக செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

கனேடியத் தமிழர் பேரவையின்(CTC)பேச்சாளராக விளங்கிய டேவிட் பூபாலப்பிள்ளை அவர்களின் பாலியல் துஸ்பிரயோகம் குறித்த விடயத்தைகுறித்த சிரேஸ்ட பிரதிநிதியிடம் அவர்கள் எடுத்து விளக்கியிருந்தனர். இந்த சந்திப்பிற்கு முன்பாக தமது முறைப்பாட்டிற்கு காரணமா விளங்கிய ஆவணங்களையும் தமது முறைப்பாட்டிற்கு ஆதாரமாக குறித்த சிரேஸ்ட பிரதிநிதியிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட அந்த சிரேஸ்ட பிரதிநிதி இரண்டு தனி நபர்களுக்கிடையிலானதாக கருதப்படும் இந்த விடயம் அதிகார சமநிலையின்மையில் இடம்பெற்றுள்ளது என்றும் தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உதவி கோரி அந்த அமைப்பை நாடிய பலவீனமான ஒருவர் மீதான அதிகார துஸ்பிரயோகமாக இதனை கருதுவதாகவும் அந்த அமைப்பின் உட்கட்டுமானத்தையே பாதிக்கும் விதமான பல விளைவுகளை இது தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்படட்ட ஒருவர் இக்கட்டான நிலையில் தனக்கான தீர்வினை தேடிக் கொண்டிருக்கையில் அவருடைய இக்கட்டான நிலைமையினை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது ஏற்புடையதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் குறித்து கனேடியத் தமிழர் பேரவையின்(CTC)தலைவர் வைத்திய கலாநிதி. சாந்தகுமார் ஊடாக கனேடியத் தமிழர் பேரவைக்கு(CTC) குறித்த சிரேஸ்ட் பிரதிநிதி அனுப்பிய மின்னஞ்சலில் திரு.டேவிட் பூபாலப்பிள்ளை மீது சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் உடனடியாக கனேடியத் தமிழர் பேரவையில்(CTC)இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக திரு.டேவிட் பூபாலப்பிள்ளை அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிர்வாக விடுப்பில் செல்லுமாறு பணிக்க வேண்டும் என்றும் சுயாதீனமான மூன்றாம் தரப்பின்  மூலமாக இந்த விடயம் குறித்த விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும் அதன் மூலமாக இந்த அமைப்பின் எதிர்கால செயல்பாடுகளை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதை ஆராயவேண்டும் என்றும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கையினை கட்டியெழுப்புதவற்கு உதவியாக இந்த  விடயம் குறித்து எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்  என்பதை ஆராயுமாறும் அந்த  சிரேஸ்ட பிரதிநிதி தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஸ்ட் பிரதிநிதியின் வேண்டுகோளுக்கு பதிலளித்த கனேடியத் தமிழர் பேரவையின்(CTC)தலைவர் வைத்திய கலாநிதி சாந்தகுமார் அவர்கள் சுயாதீனமான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். எனினும் இந்த விடயம் குறித்து சுயாதீனமான விசாரணைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

உண்மை எது ?

சிரேஸ்ட பிரதிநிதியின் இந்த முயற்சியினை அடுத்து திரு. பூபாலபிள்ளை அவர்கள்  தமது அமைப்பின் பணிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக கனேடியத் தமிழர் பேரவையின்(CTC) தலைவர் வைத்திய கலாநிதி சாந்தகுமார் சிரேஸ்ட பிரதிநிதிக்கு அறிவித்துள்ளார்.

எனினும் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தமது வருடாந்த பொதுக் கூட்டம் தொடர்பான அறிவித்தலில்; இந்த விடயம் குறித்த பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“கனேடியத் தமிழர் பேரவையுடன் பல வருடங்கள் தன்னார்வத் தொண்டராக இணைந்த பணியாற்றிய திரு.டேவிட் பூபாலப்பிள்ளை அவர்கள் தமது அமைப்பின் பேச்சாளராக 2017ம் ஆண்டு செப்ரெம்பர்  மாதம் வரை பணியாற்றியதாகவும் அதன் பின்னர் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரை ஒப்பந்தப் பணியாளராக செயயல்பட்டதாகவும் தற்போது தனது பணிகளில் இருந்து வெளியேறி வேறு நல்ல வாய்ப்புகளை நோக்கி பயணிக்கும் அவருக்கு தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக அந்த அமைப்பின் தலைவர் கூறியுள்ளார”.

எனினும் இது தவறான  தகவல் என்பதை பின்வரும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. திரு. பூபாலபிள்ளை அவர்கள் கனேடியத் தமிழர் பேரவையின்(CTC)ஊடகப் பேச்சாளராக மார்ச் 31 , 2018ன் பின்னரும் இயங்கியமைக்கான ஆதாரங்கள் சில இங்கே பகிரப்படுகின்றன.

https://www.toronto.com/news-story/8579084-canada-failed-tamil-men-who-feared-deportation-lgbtq-advocate-says/

20.04.2018 ல் CTC யினால் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வமான ஊடக அறிக்கையில் திரு.டேவிட் பூபாலபிள்ளை  கனேடியத் தமிழர் பேரவையின்(CTC)பேச்சாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.canadiantamilcongress.ca/press-releases/public-institutions-failed-alleged-mcarthur-victims/

CP24 நடத்திய கலந்துரையாடலில் திரு.பூபாலபிள்ளையவர்கள் தமது அமைப்பின் பேச்சாளராக  கலந்து கொண்டமை குறித்து CTC அமைப்பின் Youtube Channel இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=kEih_BfmEqw

சமூகத்திடம் இருந்தும் பல்வேறு நிலைகளில் உள்ள அரசாங்கத்திடம் இருந்தும் நிதி உதவியினை பெறும் கனேடியத்; தமிழர் பேரவை (CTC)அனைவருக்கும் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளது என்பதை நினைவு படுத்துகின்றோம்.

வாக்கு மூலங்கள்.

கனேடியத் தமிழர் பேரவையின்(CTC)தலைவர் கலாநிதி சாந்தகுமாருடன் சிரேஸ்ட பிரதிநிதி மேற்கொண்ட தொடர்பாடலில் உள்ளடக்கப்பட்ட சில முக்கியமான விடயங்களையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு விரும்புகின்றோம்.

“ கனேயடித் தமிழர் பேரவையிடம்(CTC) உதவி கோரி வந்த ஒரு பெண்ணிற்கும் திரு. டேவிட் பூபாலப்பிள்ளை அவர்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு ஏற்பட்டிருந்ததாகவும் இது நீண்டகாலம் நீடித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இரு தனி நபர்களிடையில் அவர்களின் விருப்பத்துடன் ஏற்பட்ட நெருக்கமான உறவாக இதனை கருத முடிந்தாலும் இங்கு அதனை தாண்டிய அதிகார சமனின்மை குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

ஒரு அமைப்பிடம் உதவி கோரி வந்த ஒருவர். தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளினால் பலவீனமான நிலையில் உள்ள ஒருவர் மீது மேற்கொள்ளபட்ட இந்த சுரண்டல் என்பது பல பாதிப்புகளை ; ஏற்படுத்தும் என்பதோடு இந்த அமைப்பின் அடிப்படையினை ஆட்டம் காணச் செய்து விடும் என்றே நான் கருதுகின்றேன்.

பல வருடங்களாக இயங்கி வரும் ஒரு அமைப்பு என்ற வகையில் இந்த முறைப்பாடு குறித்து நாம் சரியான வகையில் அதனை கையாளவில்லை என்று நான் கருதுகின்றேன்.  முன்னெச்சரிக்கையுடன் இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ளும் பொறி முறையை நாம் கொண்டிருக்கவில்லை .

இந்த அமைப்பிடம் உதவி கோரி வருகின்றவர்கள் மீது சுயநலன்கள் கொண்ட சுரண்டல்களை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பயிற்சிகளையும், வளங்களையும், கற்பித்தல் நடவடிக்கைகளையும் நாம் இந்த அமைப்பின் தன்னார்வத் தொண்டர்களுக்கும், பணியாளர்களுக்கும், பணிப்பாளர்களுக்கும் இதுவரை வழங்கவில்லை.

நாம் முன்னோக்கி நகர்வதற்குரிய துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் நம்புகின்றேன்.

அந்த அடிப்படையில் திரு.டேவிட் பூபாலப்பிள்ளை அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிர்வாக விடுப்பில் செல்லுமாறு பணிக்க வேண்டும் என்றும் சுயாதீனமான மூன்றாம் தரப்பின்  மூலமாக இந்த விடயம் குறித்த விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும் அதன் மூலமாக இந்த அமைப்பின் எதிர்கால செயல்பாடுகளை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதை ஆராய வேண்டும் என்றும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கையினை கட்டியெழுப்புதவற்கு உதவியாக இந்த விடயம் குறித்து எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்  என்பதை ஆராயுமாறும் நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த விசாரணை சுயாதீனமானதாகவும் பாதிக்கப்பட்ட நபர் சார்ந்ததாகவும் இரகசியமானதாகவும் (Confidential)  அமைய வேண்டும். இந்த அமைப்புடன் எந்த விதமான தொடர்புகளுமற்ற ஒருவரின் ஒத்துழைப்புடன்  இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணையை நடத்தக் கூடிய சில தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விபரங்களை உங்களுக்கு வழங்குவதற்கு நான் தயராக இருக்கின்றேன்.

இது எங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல ஒரு வாய்ப்பு என்று நான் நம்புகின்றேன். எங்கள் அமைப்பின் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் எவ்வாறானவை  எமது  நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்பதை வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடமையுடனும் அனைவருக்கும் தெரிவிப்பதற்கும் தெளிவுபடுத்துவதற்குமான நல்ல வாய்ப்பாக இதனை நாம் பயன்படுத்த வேண்டும். புதிய மற்றும் முன்னாள் நிர்வாகிகள் இணைந்து இந்த செயல் புத்தாக்க திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று நான் முன்மொழிகின்றேன்.

கனேடியத் தமிழர் பேரவை (CTC) என்பது மிகவும் பெரியது. ஓரு தனி நபரைவிடவும் தனி நபர்களை விடவும் முக்கியத்துவம் மிக்கது. தமிழ் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு  அமைப்பாக நாம் முன்னோக்கி நகர வேண்டியது அவசியமானது.

இந்த விடயம் குறித்து தீர்வு காண்பதற்கு உங்களுக்கு சகல விதங்களிலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன். இந்த விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது. இதில் ஏற்படும் தாமதங்கள் எமது அமைப்பின் நம்பகத் தன்மை மீதும் செயல்பாடுகள் மீதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால் இதற்கு முன்னுரிமையளித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன்.

 CALL TO ACTION:

We call on the community to hold Canadian Tamil Congress to account with regards to an allegation of sexual misconduct at the organization. 

We also call for the immediate resignation of Canadian Tamil Congress’ President, Dr. Vadivelu Santhakumar. (Dr. Santhakumar)

Since launch of the petition, Canadian Tamil Congress continues to fail in categorically denying its content. 

The organization also continues to fail in making an appropriate or meaningful public statement on the subject matter. 

As members of the community with a growing support base, we further call on Canadian Tamil Congress to bring forth: 

A) constitutional amendment to entrench gender equality in the composition of its Board of Directors, 

B) a female President to lead the organization into the future, and

C) an independent complaint mechanism to address misconduct matters.

IGNORED PLEA FOR HELP:

The complainant through members of the community brought the issues forward to Canadian Tamil Congress. Canadian Tamil Congress and or representatives of the organization ignored the complainant’s plea for help. The complainant was on the brink of suicide.

WHAT TRANSPIRED PRIOR TO THIS CALL TO ACTION?

As a result, several members of the community met with a senior representative of Canadian Tamil Congress. Prior to the meeting, the senior representative was provided with documentation relating to an allegation of sexual misconduct on the part of David Poopalapillai (Mr. Poopalapillai).

POWER IMBALANCE, VULNERABLE,  EXPLOITATION:

According to the senior representative of Canadian Tamil Congress, Mr. Poopalapillai’s conduct is “problematic due to the power imbalance between the two individuals.  The fact that a person seeking help from the organization, who appeared vulnerable, and susceptible to exploitation poses a number of troubling issues that goes to the heart of the organization.”

PROMISE OF AN INVESTIGATION:

The senior representative in correspondence requested Canadian Tamil Congress through its President Dr. Santhakumar to hold an independent investigation and called on Mr. Poopalapillai to be relieved of his duties effective immediately.

Specifically, the senior representative wrote “I am proposing that David Poopalaipillai be relieved of his duties effective immediately and placed on administrative leave, pending a full, independent third party investigation, and the outcome of which shall serve to guide the organization on how to move forward, and what disciplinary actions be taken to ensure that confidence is restored in the organization". 

In response, Dr. Santhakumar committed to an independent investigation. However, there was never an independent investigation at Canadian Tamil Congress.

THE TRUTH?

Mr. Poopalapillai was “relieved of his duties” as a result of the senior representative’s efforts. Dr. Santhakumar communicated this to the senior representative. Despite this, Canadian Tamil Congress stated the following in its Annual General Meeting 2018 Update sent on July 6, 2018:

“President (Dr. Santhakumar) wished Mr. David Poopalapillai the very best towards his plans to pursue other opportunities and thanked him for his many years of service to CTC, first as a volunteer official and then as the spokesperson until September 2017, and thereafter on a contract basis until March 31, 2018”.

This is misrepresentation as Mr. Poopalapillai continued to act as Canadian Tamil Congress spokesperson post March 31, 2018. 

https://www.toronto.com/news-story/8579084-canada-failed-tamil-men-who-feared-deportation-lgbtq-advocate-says/

Canadian Tamil Congress’ own press release refers to Mr. Poopalapillai as the spokesperson as of April 20, 2018. https://www.canadiantamilcongress.ca/press-releases/public-institutions-failed-alleged-mcarthur-victims/

Canadian Tamil Congress’ Youtube Channel on April 27, 2018 posted a clip of a press conference that appeared on CP24 with Mr. Poopalapillai acting as the spokesperson.

https://www.youtube.com/watch?v=kEih_BfmEqw

The community as well as all levels of government that provide funding to Canadian Tamil Congress must hold it to account.

MORE EXCERPTS FROM THE SENIOR REPRESENTATIVE OF CANADIAN TAMIL CONGRESS’ CORRESPONDENCE TO DR. SANTHAKUMAR:

“It is alleged that there was an inappropriate, prolonged, intimate relationship between David Poopalapillai with an individual woman who came to seek help from the Canadian Tamil Congress.  The allegation is that an intimate relationship developed between the two, all consensual in nature as far as I am aware, however, problematic due to the power imbalance between the two individuals.  The fact that a person seeking help from the organization, who appeared vulnerable, and susceptible to exploitation poses a number of troubling issues that goes to the heart of the organization. 

As the organization grew and evolved over the years, we have collectively failed to put measures in place where this issue would have been addressed, both proactively, and through a complaint resolution mechanism.  The organization did not provide enough training, resources, or educational processes in place where staff, volunteers and Board Members were given the appropriate toolkit to ensure that those who seek our assistance are not exploited.

Moving forward, I believe that this requires us to act swiftly and without delay.  I am proposing that David Poopalaipillai be relieved of his duties effective immediately and placed on administrative leave, pending a full, independent third party investigation, and the outcome of which shall serve to guide the organization on how to move forward, and what disciplinary actions be taken to ensure that confidence is restored in the organization. 

With respect to an investigation, in order to ensure due process, I believe that it ought to be independent, victim centered, confidential, and be carried out with the assistance of someone who is fully removed from the organization.  I will be willing to provide some names of individuals or firms that can undertake such investigation.  

Finally, I believe this is a good opportunity to review and revise the mandate, program, and operations of the Canadian Tamil Congress with a view of ensuring that it is open, transparent, and accountable to all whom it serves.  In furthering this, I would recommend that a group that comprises both current and former members, be part of a renewal process that can support the organization towards this path. 

In conclusion, I have always believed that the Canadian Tamil Congress is bigger and more important than an individual or individuals.  Consequently, we have an obligation to ensure that we can move forward towards fulfilling the needs of the Tamil community, in a manner that has the confidence and support of the community. 

I commit to supporting you in this process and working towards a timely resolution.  It is imperative that this matter is treated as a high priority, with immediate and urgent attention as any further delays to address this would irreversibly compromise the integrity of the organization."