இரண்டாம் காமராசரை தமிழகம் அழைக்கிறது

Victory

இரண்டாம் காமராசரை தமிழகம் அழைக்கிறது

This petition made change with 108 supporters!
தமிழன் K started this petition to திரு. உ.சகாயம், I.A.S.,

இரண்டாம் காமராசரே "சகாயம்" செய்ய வாருங்கள் !
திரு. உ.சகாயம், I.A.S., அவர்களை தலைமை ஏற்க அழைக்கிறது தமிழகம் !
 
குறள் 770:
"நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்"
பொருள்:
நேர்மையான நிலையான மன உறுதி உடைய மக்கள் நிறைய இருப்பினும் வழிநடத்தும் தலைவன் சரியாக அமையாவிட்டால் வெற்றி இல்லை.

விவசாயிகள், மீனவர்கள், நீட் தேர்வு, ஹிந்தி திணிப்பு, வேலை வாய்ப்பு பறிப்பு, காவிரி, முல்லை-பெரியார், பெப்சி, நியூட்ரினோ, மீத்தேன், ஸ்டெர்லைட், இயற்கை வள சுரண்டல், கனிம வள சுரண்டல், இப்படி தினந்தோறும் சராசரியாக 47 போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றது. நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் 15 சதவீதம் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. இவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல, தமிழர்களுக்கெதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் போர். இந்த தன்மானப் போரில் வெற்றி பெற நேர்மையான மன உறுதி உடைய படைத்தலைவன் திரு.சகாயம் அவர்கள் நமக்கு தேவை.

“ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றிப் போராளிகளே, சமூக மாற்றம் உங்களை அழைக்கிறது”

கல்விக் கொள்ளை தடுத்திட, மருத்துவக் கொள்ளை தடுத்திட, நீதி காத்திட, விவசாயிகளின் நலன் பேணிட, மீனவர் உரிமை மீட்டிட, இயற்கை வள சுரண்டல் நிறுத்திட, வேலை வாய்ப்பு பெருக்கிட, முறைகேடு அற்ற TNPSC அமைத்திட, தொழில் வளம் உருவாக்கிட, சாதி மத பேதம் தவிர்த்திட, குற்ற பின்னணி உள்ளவர்களை அரசியலில் விலக்கிட, தமிழன் மரபு காத்திட, என அனைத்திலும் நேர்மையான சமூகம் அமைத்திட இரண்டாம் காமராசரான திரு.சகாயம் அவர்களின் தலைமை நமக்கு அவசியம் தேவை.

“சகோதர / சகோதிரிகளே அணிதிரளுங்கள் சமூக மாற்றம் உங்களை அழைக்கிறது”

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வானோடு முன்தோன்றிய மூத்தகுடி “ என்ற பெருமை உடைய தமிழன் இன்று இலவசங்களால் சோம்பேறிகளாகி, திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் மூழ்கித் தரம் தாழ்ந்து, தவறான தலைவர்கள் பின்னால், தவறான கொள்கைகளைப் பற்றிக்கொண்டு தனது உரிமைகளை இழந்து வருகிறான்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?"
-சுப்பிரமணிய பாரதி
 
இந்த அக்கினிகுஞ்சு போன்றது தான் திரு.சகாயம் அவர்களுக்கு நாம் விடுக்கும் இந்த அழைப்பு. இதன் மூலம் தமிழ் சமூகம் வெளிச்சம் காணும் என்பதில் ஐயமில்லை, உலகிற்கான சமூக புரட்சி இந்தியாவின் தென்பகுதியில் இருந்து உருவாகும் என்ற வராலாற்று அறிஞர்களின் கணிப்பும் மெய்யாகும்.
 
முதலாம் காமராசரை தோற்கடித்தோம் பல இன்னல்களை சந்தித்தோம், இந்த தருணத்தில் தமிழர்கள் அனைவரும் இரண்டாம் காமராசரான திரு.சகாயம் அவர்களை தமிழக முதல்வராக்க, அவர்களின் தலைமையில் நேர்மையான தமிழ் சமூகத்தைக் கட்டமைக்க உறுதுணையாக இருப்போம் என்று உறுதியேற்போம். நன்றி!

இனி,
தமிழ் வெல்லும்..!
தமிழர் வாழ்வு செழிக்கும்..!

திரு.சகாயம் அவர்கள் பற்றி அறிய

அவரின் சாதனைகள் பற்றி அறிய

Victory

This petition made change with 108 supporters!

Share this petition