காயல்பட்டினம் வழியாக அரசு பேருந்துகளை இயக்க கோரி தமிழக முதல்வருக்கு மனு!

Petition Closed

காயல்பட்டினம் வழியாக அரசு பேருந்துகளை இயக்க கோரி தமிழக முதல்வருக்கு மனு!

This petition had 659 supporters
நடப்பது என்ன? WHATSAPP குழுமம் started this petition to தமிழக முதல்வர் (CHIEF MINISTER OF TAMIL NADU)

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு,

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரினை அரசு பேருந்துகள் பல ஆண்டுகளாக புறக்கணித்து வருகின்றன.

இது குறித்து - 1000 க்கும் மேற்பட்ட மக்கள், கையெழுத்திட்டு, போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து துறை அரசு செயலர், ஆறு அரசு பேருந்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை - கோரிக்கைகள் வழங்கியும், தொடர்ந்து அரசு பேருந்துகள் - 50,000 மக்கள் வாழும் காயல்பட்டினம் நகரை - புறக்கணிக்கின்றன.

இதனால் - பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் உட்பட பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


வேறு வழியில்லாமல் - அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இன்று (ஆகஸ்ட் 6) காலை - திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைமைக்கு - பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே - இந்த விஷயத்தில் தாங்கள் தயவு கூர்ந்து, தனி அக்கறை செலுத்தி, எங்கள் ஊருக்கு வர வேண்டிய பேருந்துகள், எங்கள் ஊரை புறக்கணிக்காமல் - எங்கள் ஊர் வழியாக இயக்கப்பட உத்தரவிடும் படி, தங்களை கேட்டு கொள்கிறோம்.

Petition Closed

This petition had 659 supporters

Share this petition