Petition Closed

மேதகு இந்திய குடியரசுத்தலைவர் அவர்களுக்கு,

This petition had 15 supporters


மேதகு இந்திய குடியரசுத்தலைவர் அவர்களுக்கு,

         தமிழகத்தில் தற்சமயம் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் தாங்கள் அறிந்ததே!

தமிழகத்தில் நடைபெற்று வரும் மாநில ஆட்சியை தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை என்பது பத்திரிகை வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

சமீபத்திய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும்  தீர்மானம் நிறைவேற்றும்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் எவரும் சட்டமன்றத்தில்  இல்லை.  சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்ததாக சொல்லபடும் எடப்பாடி திரு.பழனிசாமி மீது 15/02/2017 அன்று இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 342, 343, 353, 365, 506(1) ன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை சட்ட விரோதமாக அடைத்துள்ளதாக அவர்மீது வழக்கு  நிலுவையில் இருக்கும்போது,   அடைத்து வைத்ததாக கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர்களை,  காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துவந்து, பல்வேறு களேபரங்களுக்கு இடையே தனது பெரும்பான்மையை எடப்பாடி திரு. பழனிசாமி நிரூபித்துள்ளார்.

எடப்பாடி திரு. பழனிசாமி மீது  ஆள்கடத்தல், சட்டவிரோதமாக அடைத்துவைத்தல், பொது ஊழியரை கடமை செய்ய விடாமல் தடுத்தல் போன்ற  5 பிரிவுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தமிழக ஆளுநர் அவர்கள் அவரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைத்ததை ஆளுநர் மீது தமிழக மக்கள் ஆகிய  நாங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் செயலாக நினைக்கிறோம்.

ஆகவே இந்திய ஜனாதிபதி ஆகிய தாங்கள் தங்களின் உட்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக மக்களின் நலன் கருதி தமிழக சட்டமன்றத்தை கலைத்து. புதிய சட்டமன்ற தேர்தலுக்கு உத்தவு இடவேண்டும் என்றும், எடப்பாடி  திரு.பழனிசாமி யின் முதல்வர் பதவி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறோம்.

இளஞ்சிறகுகள்.



Today: Elayaraja is counting on you

Elayaraja A needs your help with “இளஞ்சிறகுகள்: மேதகு இந்திய குடியரசுத்தலைவர் அவர்களுக்கு,”. Join Elayaraja and 14 supporters today.